Categories: Cinema News latest news throwback stories

பாலசந்தர் தப்பிச்சிட்டாரு… குஷ்பு மாட்டிக்கிட்டாரே..! பிடித்தது கமல் தானாம்..!

தமிழ்த்திரை உலகில் கமல், ரஜினி இருவருமே பெரிய ஜாம்பவான்கள். இவர்களது படங்கள் என்றாலே ரசிகர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கொண்டாடுவர். இவர்களில் யாரைப் பிடிக்கும் என்று கேட்டால் பிரபலங்கள் பலரம் கழுவுற மீனுல நழுவுற மாதிரி பதில் சொல்வாங்க. ஆனால் நடிகை குஷ்பு தைரியமாக இப்படி ஒரு பதிலைச் சொல்லி இருக்கிறார். வாங்க என்னன்னு பார்ப்போம்.

இதையும் படிங்க… போங்காட்டம் ஆடி பிரியாணி வாங்கி கொடுத்த விஜயகாந்த்!. நம்ம கார்த்தி பருத்தீவீரன்ல பண்ணுவாரே அதேதான்!

தமிழ்த்திரை உலகில் உங்களுக்குப் பிடித்த நடிகர் கமலா, ரஜினியா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? அதற்கு இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் என்ன சொன்னார் தெரியுமா? என்னுடைய இரு கண்களில் எது பிடிக்கும்? வலது கண்ணா, இடது கண்ணா என்று கேட்பது போல் உள்ளது என்றார்.

இதே கேள்வியை நடிகை குஷ்புவிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? சந்தேகத்திற்கு இடமில்லாமல் கமல்ஹாசன் தான் என்றாராம். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்.

ரஜினிகாந்தை என் நண்பர் என்று சொல்ல முடியாது. அவர் ‘ஆ..’ என்று அண்ணாந்து பார்க்கும் அளவில் உயரத்தில் இருக்கிறார். வெகு தூரத்தில் இருக்கிறார். ஆனால் கமல்ஹாசன் அப்படி இல்ல.

அவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். எப்போது வேண்டுமானாலும் நான் அவர்கிட்ட போன் பண்ணிப் பேசுவேன். அவர் என்னோட வீட்டுக்கு வருவார். நான் அவரோட வீட்டுக்குப் போவேன்.

இதையும் படிங்க… சுகன்யா செஞ்சதை யாரும் செய்ய முடியாது! சைடு ஆக்டர் கூட இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க..

என் வீட்டில் நடக்குற எல்லா நிகழ்ச்சிகளிலும் கமல்ஹாசன் கலந்து கொள்வார். என்னுடைய குழந்தைகளும், அவரோட குழந்தைகளும் ரொம்ப க்ளோஸ். அப்படி பேமிலி பிரண்ட்ஸா நாங்க இருக்குறதால கமல்ஹாசனை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார் குஷ்பு.

மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v