×

பரோட்டா சூரி சுட்ட பஜ்ஜி: வைரலாகும் வீடியோ!

நடிகர் சூரி என்றாலே அனைவருக்கும் பரோட்டா தான் ஞாபகம் வரும். வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அவர் சாப்பிட்ட பரோட்டா காமெடி இன்னும் அனைவரும் மனதிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பரோட்டா சூரி படக்குழுவினர்களுக்கு பஜ்ஜி சுட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரல் ஆகியுள்ளது

 

சசிகுமார் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் சூரி, தனக்கு படப்பிடிப்பு காட்சிகள் இல்லாத போது அங்கு வந்திருந்த சமையல்காரருக்கு பஜ்ஜி சுட உதவி செய்தார். சூரி பஜ்ஜி சுடும் வீடியோவை அவர் தனது டுவிட்டர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். 

இந்த வீடியோவில், ‘நீங்க ஷூட்டுக்கு கூப்பிடுங்க, இல்ல கூப்டாம போங்க ,நம்மளுக்கு பஜ்ஜி போட்டே ஆகணும்’ என்று அவர் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது‘பரோட்டா சூரி இனிமேல் பஜ்ஜி சூரி’ என்று அழைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்

From around the web

Trending Videos

Tamilnadu News