Connect with us

Cinema News

மம்மூட்டி ஸ்பாட்லயே அடிப்பாரு!.. அவர்கூட நடிக்கவே மாட்டேன்னு அடம்பிடிச்சேன்.. பாவா லட்சுமணன் பேட்டி!

“மாயி அண்ணன் வந்திருக்காக.. மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக.. மற்றும் நம் உறவினர் எல்லாம் வந்திருக்காக.. வாம்மா மின்னல்” என்கிற காமெடியில் நடித்த பாவா லட்சுமணன் பல திரைப்படங்களில் வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

மம்மூட்டியுடன் நான் நடிக்கவே பயந்ததாகவும் அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கு என சமீபத்திய பேட்டியில் பாவா லட்சுமணன் பேசியுள்ளார். சிறுவயதில் மதுரையில் ஒரு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் சென்னைக்கு வந்தேன். அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்கு பதிலாக நான்தான் நடிக்க வேண்டியது. பாரதிராஜாவிடம் என்னை அழைத்துச் சென்றனர். என்னைப் பார்த்துவிட்டு சில நாட்கள் கழித்து கூப்பிடுகிறேன் என அனுப்பிவிட்டார்.

இதையும் படிங்க: நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா… தெலுங்கு பக்கம் சாய்ந்த ரஜினிகாந்த்.. பெத்த கோடி சம்பளமாம்!…

நானும் ஊரில் பாரதிராஜா படத்தில் நடிக்கப் போகிறேன் என சொல்லிவிட்டேன். ஆனால் அதன் பின்னர் கார்த்தி அந்தப் படத்தில் நடித்தார். எப்படியும் சினிமாவில் தலைகாட்டி விட்டதால் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என சென்னையிலேயே சிறுசிறு வேலைகளை செய்துகொண்டு தங்கிவிட்டேன் என்றார்.

வடிவேலுவுடன் மாயி படத்தில் நடித்த பிரபலமான நிலையில், அவருடன் பல படங்களில் இணைந்து நடித்து இருக்கிறேன். சினிமாவை எளிதாக எனக்கு நிறைய முறை கற்றுக் கொடுத்திருக்கிறார் என பவா லட்சுமணன் வடிவேலு குறித்தும் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இழுத்து மூடினாலும் எடுப்பா தெரியுது அழகு!.. ரேஷ்மாவை நாட்டுக்கட்ட என வர்ணிக்கும் ரசிகர்கள்!..

ஆனந்தம் படத்தில் நடிப்பதற்கு முதலில் வடிவேலுவை தான் கேட்டனர். ஆனால் ஒரேயடியாக 40 நாட்கள் கால்ஷீட் தர முடியாத காரணத்தால் அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக விவேக், சார்லி உள்ளிட்ட பல காமெடி நடிகர்களை அணுகினர். கடைசியாக சௌத்ரி சார் ஆபீஸில் மேனேஜராக இருந்த என்னை வைத்தே அந்த காட்சியை லிங்குசாமி அறிவித்தார்.

மம்மூட்டியுடன் நடிக்க வேண்டும் என்று சொன்னதும் நான் முடியாது என்று கூறிவிட்டேன். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் சரியாக நடிக்கவில்லை என்றால் அந்த இடத்திலேயே அடி வெளுத்து விடுவார் என கேள்விப்பட்டிருந்தேன். அதை கூறியதும் படத்தை பண்ற நானே கவலைப்படவில்லை. நீ ஏன் பயப்படுற வா பாத்துக்கலாம் என என்னை அழைத்துக் கொண்டு போய் நடிக்க வைத்தனர்.

இதையும் படிங்க: இருந்தாலும் தளபதிக்கு குசும்புதான்! இன்விட்டேஷன் வச்ச பாண்டியம்மாவிடம் வம்பிழுத்த விஜய்

யாரு காமெடியன் என மம்மூட்டி சார் கேட்டார். என்னை அறிமுகப்படுத்தியதும் ஒரு சீன்ல நடிக்க சொல்லுங்க பார்க்கலாம் என்றார். அப்பாஸ் உடன் பேசும் காட்சியில் நடித்தேன். அதைப் பார்த்துவிட்டு மம்மூட்டி பாராட்டினார். உங்க கூட நடிக்க பயமாயிருக்கு என அவனிடமே சொல்லிவிட்டேன். ஸ்க்ரீனுக்குத்தான் பயப்படணும். அதில் சரியா பண்ணிட்டா மத்த யாருக்கும் பயப்பட தேவையில்லை என்றார் என மம்மூட்டி தன்னை அந்த படத்தில் நடிக்க அனுமதித்தது பற்றி கூறியுள்ளார். பல முன்னணி நடிகர்கள் தன்னை ஒதுக்கித் தள்ளிய நிலையில், நடிக்கிறேனா என்பதை மட்டுமே மம்மூட்டி பார்த்தார் என பேசியுள்ளார்.

 

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top