×

பெண் மதுவால் அழிந்த நடிகர்... அந்தரங்கத்தை பேசி பரபரப்பை கிளப்பிய பயில்வான் 

சுரேஷுக்கு பெண்கள் சகவாசம் அதிகமாக இருந்ததாகவும், 24 மணி நேரமும் போதையில் இருக்கும் சுரேஷ் பெண்கள் சகவாசமும் அதிகமாக இருந்ததால் சினிமாவின் மீது கவனம் இல்லாமல் தடுமாறினாராம். 
 
actor-suresh-

சமீபகாலமாக சினிமாவில் மறைத்து வைத்திருக்கும் சில அந்தரங்க விஷயங்களை கூறி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்கள் பலர் தற்போதும் கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள். 

அந்த அளவிற்கு பிரசாந்த், அரவிந்த்சாமி, கமல் போன்ற காதல் மன்னர்கள் வரிசையில் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் தான் சுரேஷ். பிரபல தயாரிப்பாளர் மகனான இவர், 1981 ஆம் ஆண்டு பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனையடுத்து இரு ஆண்டுகளில் 20 படங்களுக்கும் மேல் நடித்து மார்க்கெட்டை தக்கவைத்தார். பெரியளவிற்கு வருவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் தமிழில் வாய்ப்புகளை இழந்தார். பின் தெலுங்கு பக்கம் சென்று குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். சில வருடங்களுக்கு முன் தளபதி விஜய்யின் தலைவா படத்தில் அமலா பாலுக்கு தந்தையாக நடித்திருப்பார்.

தற்போது அவர்பற்றி சில விஷயங்களை பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். சுரேஷுக்கு பெண்கள் சகவாசம் அதிகமாக இருந்ததாகவும், 24 மணி நேரமும் போதையில் இருக்கும் சுரேஷ் பெண்கள் சகவாசமும் அதிகமாக இருந்ததால் சினிமாவின் மீது கவனம் இல்லாமல் தடுமாறினாராம். 

சினிமா உலகில் மது போதையிலும் பெண் போதையால் அழிந்த பலர் இருக்கின்றனர். அதில் மிக முக்கியமானவர் சுரேஷ் என்று அழுத்தமாக கூறியுள்ளார் பயில்வான் அவர்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News