
Cinema News
ரஜினிக்கு நான் இதை செய்வது பிடிக்காது… அவரு பேச்சையும் கேட்கலையா.. பயில்வான் சொன்ன சுவாரஸ்யம்..!
Published on
By
Bayilvan Ranganathan: தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து யாருமே யோசிக்காத சர்ச்சையான விஷயங்களை சொல்லி அதிர வைப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் செய்வது ஒன்று ரஜினிக்கு பிடிக்காதாம். அதை இன்னும் செய்து கொண்டு இருக்கும் ஆச்சரியமான தகவலை அவரே சொல்லி இருக்கிறார்.
பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் தலை காட்டியவர். அவரை சினிமா பெரிய அளவில் வளர்த்துவிடவில்லை. ஆனால் பிரபலங்கள் குறித்து சர்ச்சையாக பேசியே தனக்கான ஒரு அடையாளத்தினை உருவாக்கி கொண்டவர். இப்போது அவர் பெயர் எல்லாரிடத்திலும் பாப்புலர் தான்.
இதையும் படிங்க: ஜேசுதாஸ் பாதி.. எஸ்.பி.பி.. பாதி… கலந்து செய்த கவிதை.. யார் அந்தக் காந்தக் குரல் பாடகர்?..
அப்படி அவர் ரஜினி பிறந்தநாளான இன்று ரஜினியுடன் அவர் நடித்த அனுபவங்களை சொல்லி இருக்கிறார். அதிலிருந்து, எனக்கு ரஜினி நடிக்க தொடங்கயதுக்கு முன்னரே தெரியும். ஜேப்பியார் வீட்டுக்கு பக்கத்தில் தான் ரஜினி தங்கி இருந்தார். அப்போது நான் செய்தித்தாளில் எழுதி வந்தேன்.
அங்கு எனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில் தான் ரஜினிகாந்த் கலைஞானம் படத்தில் நடிகனாக அறிமுகமானார். அவர் குறித்து நல்லதாகவே எழுதி வந்தேன். ஆரம்பத்தில் ரஜினியுடன் நான் நடித்த திரைப்படம் இயக்குனர் மகேந்திரன் எழுதி இயக்கிய கைக்கொடுக்கும் கை. அப்படத்தில் எனக்கு காமெடி நடிகர் வேடம் கொடுத்து இருந்தார்.
இதையும் படிங்க: இளையராஜா எச்சரித்தும் அவர் பேச்சை மீறிய எஸ்.பி.பி! அதனால் வந்த பின்விளைவு என்ன தெரியுமா?
ஆனால் படம் பெரிய அளவில் போகவில்லை. உண்மையை சொல்லப்போனால் நான் செய்தியாளராக இருப்பது அவருக்கு பிடிக்காது. ஏன் அதில் இருக்கீங்க? என் பக்கம் வாங்க. சினிமாவில் இருங்க என்றார். நான் எனக்கு நிறைய வாய்ப்புகள் இல்லை. இதையும் விட்டால் நான் சாப்பாட்டுக்கு என்ன செய்வேன் என்றேன்.
ஆனாலும் ரஜினிகாந்த் அதை ஒப்புக்கொள்ளவில்லை. சத்யா மூவிஸ் தயாரித்த படத்தினை ராஜசேகர் இயக்கி இருந்தார். அதில் வில்லனாக ஆனந்தராஜ் நடிக்க இருந்தார். ஆனால் அவர் ஏற்கனவே இதே போன்று கதாபாத்திரத்தில் 3 படங்களில் நடித்துவிட்டதால் எனக்கு வாய்ப்பு கொடுத்தனர் எனக் குறிப்பிட்டார்.
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...