Categories: Cinema News latest news throwback stories

வடிவேலு எல்லாம் ஒரு மனுஷனா… மதுரைக்காரனோட மானத்த வாங்காதப்பா… பயில்வான் பொளேர்..!

கேப்டனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தாமல் அஜீத், கார்த்தி, சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்கள் வெளிநாட்டில் இருப்பதால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் வடிவேலு உள்ளூரில் இருந்து கொண்டே கலந்து கொள்ளாமல் இருந்தது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரபல யூடியபரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.

சாப்பாடு போடுவதில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் வாரிசாக இருப்பவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். கேப்டனைப் பொறுத்தவரை கதர் சட்டை, கதர் வேட்டியை அணிபவர். உழவன் மகன் சூப்பர்ஹிட்டானபோது எம்ஜிஆர் தனது ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று படக்குழுவினருக்கு விருந்து கொடுத்தாராம். இந்தப் படம் நான் நடிச்ச படம் மாதிரி இருக்கு. என்னை மாதிரியே பண்ணிருக்கேன்னு எம்ஜிஆர் சொன்னாராம். கலைஞருக்கு தங்கப் பேனா கொடுத்தவரும் கேப்டன் தான்.

இதையும் படிங்க… ஒன்னு இல்ல இரண்டு இல்ல.. விஜயகாந்த் டபுள் ஆக்‌ஷன் வேடம் போட்ட படங்கள் இத்தனையா?

வடிவேலுவுக்கும், கேப்டனுக்கும் என்ன சண்டை வந்ததுன்னு நான் அறிவேன். கேப்டனின் அக்கா மறைந்துவிட்டார். அங்கு உறவினர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். அப்போது ஒரு கார் வடிவேலு வீட்டின் முன்னால் நின்றது. அப்போது வடிவேலு மது அருந்தி விட்டு என் வீட்டு முன்னால் எப்படி காரை நிறுத்தலாம் என தகராறு செய்தாராம். அப்போது அங்கு வந்தவர்கள் மதுரைக்காரர் என்பதால் கையை நீட்டி விட்டார்களாம்.

இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. கேப்டனும் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றார். மதுரையில் திமுகவின் ஆதரவு பேச்சாளராக வடிவேலு நியமிக்கப்பட்டார். அப்போது என்ன பேசுவது என தெரியாமல் மது அருந்தி விட்டு கேப்டனைக் கண்டபடி திட்டி விட்டாராம்.

அப்போதும் தேமுதிகவினர் கோபப்பட்டு அவரை அடிக்க முயன்றனராம். அதை விஜயகாந்த் தான் தடுத்தாராம். அன்று முதல் இறப்பு வரை வடிவேலு என்ற பெயரைக்கூட சொல்லாதவர் கேப்டன். அவ்வளவு பெருந்தன்மையானவர்.

இதையும் படிங்க… கேப்டனுக்கு வந்தது என்ன வியாதின்னு தெரியுமா? பிரபலம் சொல்லும் அதிர்ச்சி தகவல்…

சின்னக்கவுண்டர் படத்தில் நடிக்க வரும்போது கவுண்டமணி வடிவேலுவைப் பார்த்து நக்கலுடன் கேட்டாராம். எங்க இருந்துய்யா இந்த ஆளைப் புடிச்சன்னு? ஆளையும் சைஸையும் பாரு… ஓடிப்போயிடு…ன்னு சொன்னாராம். உடனே ஆர்.கே.செல்வமணி 200 ரூபாயைக் கொடுத்து அனுப்பி விட்டாராம். உடனே வடிவேலு விஜயகாந்தின் காலைப் பிடித்து அண்ணே, நான் மதுரைக் காரன்ணே… நீங்க தெய்வம்ணே… என்னைக் கவுண்டர் நடிக்கக்கூடாதுன்னு சொல்றாரு… என அழ விஜயகாந்த் தான் வடிவேலுவை அந்தப் படம் முழுவதும் உடன் வந்து குடை பிடிக்க வைத்தாராம். விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்து இருக்கணும்.

பயம் இருந்தா போலீஸ் பாதுகாப்போடயாவது வந்து இருக்கலாம். இல்லேன்னா ஒரு இரங்கலாவது தெரிவித்து இருக்கலாம். அப்படின்னா என்ன தெரியுது. வடிவேலுவிடம் மனிதப்பண்பு இல்லை என்பது தெரிகிறது. எவ்வளவு சண்டைக்காரனா இருந்தாலும் இறப்பிலாவது வந்து கலந்து கொள்ள வேண்டும். இதைப் பார்க்கும்போது அவரது பிறப்பிலேயே சந்தேகம் வந்துவிட்டது. உயிரோடு இருக்கும் போது கேப்டன் மன்னித்து விட்டார். ஆனால் அவரது ஆன்மா வடிவேலுவை மன்னிக்காது.

 

Published by
sankaran v