Categories: Cinema News latest news

என்ன வேணும்னாலும் சொல்லுங்க பாக்ஸ் ஆபிஸ் கிங் தளபதி தான்.! முதல் நாள் வசூல் ரிலீஸ்..,

தளபதி விஜய் நடிப்பில் நேற்று ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே, செல்வராகவன் என பலர் நடித்துள்ளனர். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் முன்னாள் ராணுவ அதிகாரி, எப்படி தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட ஷாப்பிங் கட்டடத்தை, தனியாளாக மீட்கிறார் என்பதை ஆக்சன் , காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் நெல்சன். இருந்தும் இதில் திரைக்கதை கொஞ்சம் மந்தமாக இருந்ததால், படம் எதிர்பார்த்தபடி இல்லை என்றே விமர்சனம் வெளியாகியுள்ளது.

இருந்தாலும், விஜய் படம் இந்த வார விடுமுறை நாட்களில், பல்வேறு திரையரங்குகளில் புக்கிங் நிரம்பியுள்ளது. வழக்கமாக விஜய் படங்களுக்கு வரும் குடும்ப ஆடியன்ஸ் இதிலும் அதிகமாக வந்துள்ளனர். அதனால் படத்திற்கு வசூல் எந்தவிதத்திலும் இந்த வாரம் குறைவிருக்காது என்றே கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்களேன் – எல்லாமே எக்ஸ்டரா தான்.! பீஸ்ட்டை அடிச்சு தூக்கிய கே.ஜி.எஃப்-2.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!

இப்படத்தின் முதல் நாள் வசூல் தற்போது வெளியாகியுள்ள்ளது. இப்படம் முதல் நாள் தமிழகத்தில் மட்டுமே 38.2 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னர் இருந்த வலிமை முதல் நாள் வசூலை இப்படம் தாண்டிவிட்டது என்றே கூறப்படுகிறது. மீண்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை விஜய் நிரூபித்துள்ள்ளார் என ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan