Connect with us

Cinema News

எல்லாமே எக்ஸ்டரா தான்.! பீஸ்ட்டை அடிச்சு தூக்கிய கே.ஜி.எஃப்-2.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!

இந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த முக்கியமான திரைப்படங்களில் ஒன்று கே.ஜி.எஃப் 2. இப்படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம் கேஜிஎப் 2 திரைப் படத்திற்கு பெரிய ப்ளஸ் ஆக அமைந்தது. அதுவே அந்த படக்குழுவிற்கு கூடுதல் பொறுப்பாகவும் இருந்தது. உலகம் முழுக்க இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கேஜிஎஃப் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தாலும், தமிழகத்தில் பீஸ்ட்டின் ஆதிக்கம்தான் நேற்று வரை இருந்தது.

நேற்று வெளியான தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது கேஜிஎஃப்2 திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துவிட்டது.

இந்த திரைப்படத்தை முதல் காட்சியில் இருந்து பார்த்த அனைத்து ரசிகர்களும் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் ஆக்சன் காட்சிகளும், சென்டிமென்ட் காட்சிகளும் ரசிகர்கள் ரசிக்கும்படி அருமையாக இருக்கின்றது என்று கூறிவருகின்றனர்.

இதையும் படியுங்களேன் – தமிழகத்தில் தளபதியை ஓரம்கட்டி வரும் கே.ஜி.எப்-2.! வெளியான உண்மை விவரங்கள்.! 

இந்தப்படத்தின் ரசிகர்கள் ரிப்போர்ட்டை நமது நிருபர்கள் சேகரித்து வந்தனர். பல ரசிகர்கள் இப்படம் அருமையாக வந்துள்ளதாக கூறினார். அதிலும் ஒரு விஜய் ரசிகர், கேஜிபி படத்தைவிட பீஸ்ட் திரைப்படம் சற்று குறைவாகத்தான் இருக்கிறது. கேஜிஎப் திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று அவரே ஒத்து கொண்டார். மேலும், பலரும் இதில் ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் எக்ஸ்ட்ராவாக இருக்கிறது. என்று பாராட்டினார்.

இதனால் வரும் அடுத்தடுத்த நாட்களில், பீஸ்ட் படத்திற்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகள் குறைந்து கேஜிஎஃப்-2 படத்திற்கு அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என சூழல் உருவாகியுள்ளதாம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top