விஜய் ஆண்டனி அடுத்த பட டைட்டிலே இதுதான்!.. அப்போ தான் ஹிட் அடிக்கும்!.. ப்ளூ சட்டை மாறன் நக்கல்!..

விஜய் ஆண்டனி ப்ளூ சட்டை மாறன் குறித்து போட்ட ட்வீட்டுக்கு பிறகு அவர் எதற்காக தேவையில்லாமல் வாயை விட்டோம் என அமைதியாகி விட்டார். ஆனால், சிவகார்த்திகேயனை இமானே மன்னிச்சு விட்டாலும் விடமாட்டேன் என வச்சு செய்வது போல விஜய் ஆண்டனியையும் வண்டியில் ஏற்றி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ படம் நல்ல படம் கண்டிப்பா தியேட்டரில் போய் பாருங்க, இந்த படத்தையும் அன்பே சிவம் போல மாத்திடாதீங்க என விஜய் ஆண்டனி போட்ட ட்வீட்டுக்கு ஏகப்பட்ட பேர் மீம் போட்டு கலாய்த்துள்ளனர்.

இதையும் படிங்க: பழனிக்கே பால் காவடி எடுத்தாலும்!.. கில்லி ரீ ரிலீஸ் முதல் நாள் வசூலை முந்தாத விஷாலின் ரத்னம்!..

ப்ளூ சட்டை மாறன் உச்சகட்டமாக சென்று நடிப்பே வராத விஜய் ஆண்டனி தன்னுடைய படத்தை கமல்ஹாசன் படத்துடன் எப்படி கோர்த்து விட்டு இருக்கிறார் பாருங்க என கலாய்த்திருந்தார். இந்நிலையில், தற்போது இந்த வாரம் விஷாலின் ரத்னம் படத்தை வச்சு செய்வதை விட்டு விட்டு மறக்காமல் விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி. பிரகாஷை வறுத்தெடுத்துள்ளார்.

”விஜய் ஆண்டனியின் புதிய படங்கள் தொடர் தோல்வியை சந்திப்பதால்... அடுத்த புதுப்படத்துக்கு 'ரீ-ரிலீஸ்' என டைட்டில் வைத்து ஹிட்டாக்க 'ரோமியோ' நடிகர் முடிவெடுத்து விட்டாராம், இதனை முன்பே கணித்த 'கள்வன்' ஹீரோ ஜி.வி. பிரகாஷ் அந்த டைட்டிலை பதிவு செய்துவிட்டாராம்.” என பஞ்சர் பண்ணியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

இதையும் படிங்க: எப்பாடி… இவ்வளவு பெரிய தொகையா? புளூசட்டை மாறன் யூட்யூப் மாத வருமானம் என்ன தெரியுமா?

சினிமா விமர்சகராக இருக்கும் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து சினிமா பிரபலங்களை வம்பிழுத்து சண்டை போட்டு வருகிறார். அவர் சொல்லும் விமர்சனங்களை பார்க்க ரசிகர்கள் கூட்டமே இருப்பதால் எந்த பயமோ கவலையோ இல்லாமல் தொடர்ந்து பலரையும் நக்கலடித்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் எனக் கூறுகின்றனர்.

டியர் திரைப்படம் 2 வாரத்தில் ஓடிடியில் நாளை வெளியாக போகிறது. விஜய் ஆண்டனியின் ரோமியோ திரைப்படம் 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் என தெரிகிறது.

இதையும் படிங்க: விஜய்யை விட நான் சின்ன பொண்ணா?.. வயதை வெளிப்படையாக சொன்ன கில்லி அம்மா!..

 

Related Articles

Next Story