Categories: Cinema News latest news

ஷூட்டிங் முடிஞ்ச தைரியத்துல என்ன வேணும்னாலும் கேட்ருவியா.?! கோபத்துடன் விஜய்.!

தளபதி விஜய் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு ரெடியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை நெல்சன் எழுதி இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தினை வரவேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் தற்போது இருந்தே காத்திருக்கின்றனர். சில தியேட்டர்களில் முன் பதிவு கூட ஆரம்பித்துவிட்டது.

ஏப்ரல் 13 பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்கு அடுத்த நாள் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாக உள்ளது. ஆதலால் இந்த இரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

வழக்கமாக விஜய் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறும். அதில் விஜய் பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பார். முக்கியமாக ஒரு குட்டி கதை கூறுவார். ஆனால் இந்த முறை இசை வெளியீட்டு விழா எதுவும் நடக்கவில்லை. அது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

இருந்தாலும், படத்தின் விளம்பரத்திற்காக தற்போது சன் பிக்சர்ஸ். டிவி நிகழ்ச்சிக்காக விஜயை பேட்டி எடுத்து உள்ளது. சுமார் பத்து வருடம் கழித்து விஜய், டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

இதில் விஜய்யை கேள்வி கேட்கும் நபராக பீஸ்ட் இயக்குனர் நெல்சன் இருக்கிறார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு தளபதி விஜய் பதிலளிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதற்கான ப்ரோமோ நேற்று வெளியானது.

இதையும் படியுங்களேன் –  விருதுகளை குவித்து வரும் குக் வித் கோமாளி.! இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்.!

அதில் நெல்சன் தனது வழக்கமான பாணியில் தளபதி விஜய்யை கலாய்த்து வருகிறார். விஜயிடம் குட்டி கதை கேட்கிறார், அதற்கு விஜய் ஸ்டாக் இல்லை என்று கூற, இவர் பாக்கெட்டில் தேடிப்பாருங்கள் இருக்கும் என கலாய்த்து விடுகிறார்.

நெல்சன் வேறு ஏதோ கேள்வி கேட்க, ‘இதெல்லாம் நீ சூட்டிங் முன்னாடி  கேட்ருக்கனும்’ என்று அன்பாக கடிந்து கொள்கிறார் தளபதி. இந்த பேட்டியை சூட்டிங்கிற்கு முன்னாடி எடுக்க சொன்னார்களாம். நெல்சன் தான் முடியாது என்று கூறிவிட்டாரம்.

Manikandan
Published by
Manikandan