Connect with us
bhag_main_cine

Cinema News

அப்படியே என்னை மாதிரியே இருக்க!.. தன் சாயலில் இருக்கும் நடிகரை பார்த்து அப்பா மேலேயே சந்தேகப்பட்ட பாக்யராஜ்!..

ஒரு நடிகராக இயக்குனராக இசையமைப்பளராக கதாசிரியராக என பன்முக திறமைகளை ஒருங்கே வாய்க்கப் பெற்றவர் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ். இவரின் இயக்கத்தில் கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார். இவரின் நடிப்பில் வெளிவந்த முந்தானை முடிச்சு படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் பாக்யராஜ். மேலும் சாதனையாளருக்கான சைமா விருதையும் வென்றுள்ளார்.

bhag1_cine

பாக்யராஜ்

இவர் முதலில் பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக பணியாற்றினார். கிழக்கே போகும் ரயில் மற்றும் 16 வயதினிலே போன்ற படஙகளில் இணை இயக்குனராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார் பாக்யராஜ். பல தொலைக்காட்சி சீரியல்களிலும் பணியாற்றியிருக்கிறார்.

இதையும் படிங்க : அதெல்லாம் நடிக்க முடியாது.. வளர்த்து விட்ட இயக்குனரிடமே தன் வேலையை காட்டிய விஜய்!.. சாதித்து காட்டிய இயக்குனர்!..

சுவரில்லாத சித்திரங்கள் படம் தான் பாக்யராஜ் இயக்கிய முதல் படம். முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். இப்படி பல சாதனைகளை புரிந்து சமீபத்தில் அரசியல் கட்சியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் பாக்யராஜ் ஒரு  நடிகரை பார்த்து தன் அப்பாவின் மீதே சந்தேகப்பட்ட சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

bhag2_cine

பாக்யராஜ்

குமரேசன் என்ற நடிகரை யாராலும் மறந்திருக்க முடியாது. பல படங்களில் நடித்திருந்தாலும் சரத்குமார் நடிப்பில் வெளியான சூர்யவம்சம் படத்தில் மகன் சரத்குமாருடனேயே பயணம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.அவரை பார்த்து தான் பாக்யராஜ் ஷாக் ஆகியிருக்கிறார்.

குமரேசன் ஒரு விதத்தில் பார்ப்பதற்கு பாக்யராஜ் சாயலில் இருப்பாராம் அந்தக் காலத்தில் . படவாய்ப்புக்காக ஒரு சமயம் பாக்யராஜை பார்ப்பதற்காக குமரேசன் சென்றுள்ளார். பாக்யராஜும் இவரை பார்த்ததும் வியப்பாகியிருக்கிறார். இருந்தாலும் புகைப்படங்கள் எதுவும் கொண்டு வந்திருந்தால் கொடு என்று கூறினாராம் பாக்யராஜ்.

bhag3_cine

பாக்யராஜ்

கொடுத்த புகைப்படத்தை பார்த்ததும் ‘என்னடா என் புகைப்படத்தை என்கிட்டயே கொடுக்க ’ என கேட்டாராம். அந்த அளவுக்கு பாக்யராஜ் போஸில் ஒரு புகைப்படத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் குமரேசன். இவரும் இல்ல சார் அது நான் தான் என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : காதலுக்கு மரியாதை ஏன் மாஸ் ஹிட் படம் தெரியுமா? படத்தின் வசூல் சொன்ன ஷாக் ஆகிடுவீங்க..

உடனே பாக்யராஜ் என்னய்யா ஒரே மாதிரி இருக்கு, இது எப்படி சாத்தியமாகும்? இது ரொம்ப தப்பாச்சே! உன் அப்பா பண்ண தப்பா? இல்ல என் அப்பா பண்ண தப்பா? என்று தனக்கே உரிய பாணியில் கிண்டலடித்து கேட்டாராம். இதை குமரேசனே ஒரு பேட்டியில் கூறினார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top