×

எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன்... புலம்பும் வனிதா

நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை எளிமையாகத் திருமணம் செய்துகொண்டார். 
 

லவ் செலிப்ரேஷன் என்ற பெயரில் திருமணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த வனிதா, வீட்டிலேயே நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டதாகக் கூறினார். ஆனால், இந்த பந்தம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. குடித்துவிட்டு தகராறு
செய்வதாக பீட்டர் பால் மீது வனிதா திடீரென குற்றம்சாட்டினார். குடித்துவிட்டுத் தன்னைத் துன்புறுத்தியதாகவும் பீட்டர் பாலைத் திட்டித் தீர்த்தார்
வனிதா. 


திடீரென பீட்டர் பாலைப் பிரிந்துவிட்டதாக வனிதா கூறினார். இருவருக்கும் திருமணம் நடைபெற்றபோது வனிதாவின் பெயரை பீட்டர் பாலும், அவரது பெயரை வனிதாவும் கையில் டாட்டூவாகக் குத்தியிருந்தனர். பீட்டர் பாலைப் பிரிந்தநிலையில், அவரது பெயரை டாட்டூவாகக் குத்தியிருந்ததை இப்போது மாற்றியிருக்கிறார். பீட்டர் பால் என்ற பெயரை மாற்றி சைனீஸ் சிம்பலாகப் பச்சை குத்தியிருக்கிறார். அதன் பொருள் `இரட்டை சந்தோஷம்
(டபுள் ஹேப்பினஸ்)’ என்பதாம். இதுகுறித்து யூ டியூபில் வீடியோ வெளியிட்டுள்ள வனிதா, டாட்டூ குறித்து பேசியிருக்கிறார். 

அந்த வீடியோவில், இனிமேல் டாட்டூ குத்துவியா என்று அவரது மகள் கேட்க வனிதாவோ, குத்துவேன். ஆனால், தெளிவா இனிமேல் அழிக்காத அளவுக்கு, மாத்தாத அளவுக்கு இனி வேறெந்த நாதாரி பெயரும் குத்தமாட்டேன். என்னுடைய வாழ்க்கையில் உள்ள உறவுகள் மேலும் உறுதியடைய வேண்டும் என்று கூறியிருக்கிறார். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News