vijay antony
Vijay Antony Daughter: தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் ஹீரோவுமான விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
48 வயதாகும் நடிகர் விஜய் ஆண்டனி ஃபாத்திமா என்பவரை திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். விஜய் ஆண்டனியின் படங்களை ஃபாத்திமா தான் தயாரித்து வருகிறார். அப்பா, அம்மா இருவருமே சினிமாவில் பிரபலங்களாக உள்ள நிலையில், 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவி மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் தனது அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: என்னது இவரை நடிக்கக் கூடாதுனு விஜய் சொன்னாரா? கண்டிப்பா ஆப்பு இருக்கு மாப்பு – வாயாலயே கெடும் VP
சென்னையில் உள்ள டிடிகே சாலையில் தான் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் வீடு உள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய் ஆண்டனிக்கு மீரா மற்றும் லாரா என இரு மகள்கள் உள்ளனர். உயிரிழந்த மகளின் பெயர் மீரா ஆண்டனி என தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரி சர்ச்சையில் விஜய் ஆண்டனிக்கு தொடர்பு இருந்ததாக யூடியூப் சேனல் ஒன்று வெளியிட்ட வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்து மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக விஜய் ஆண்டனி கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஒரு வேளை LCUவாக இருக்குமோ? சூசகமாக சூர்யாவுடன் இணையும் படத்தை பற்றி அறிவித்த கார்த்தி
இந்நிலையில், அவரது மகள் மீரா மன அழுத்தத்தில் சில வாரங்களாகவே இருந்தார் என்றும் அதன் விளைவாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 12ம் வகுப்பு தேர்வு பயமா? அல்லது காதல் பிரச்சனை ஏதாவது உள்ளதா? என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Idli kadai…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…