Connect with us
vp

Cinema News

என்னது இவரை நடிக்கக் கூடாதுனு விஜய் சொன்னாரா? கண்டிப்பா ஆப்பு இருக்கு மாப்பு – வாயாலயே கெடும் VP

Actor Vijay: லியோ படத்தின் அப்டேட் ஒரு பக்கம் பரபரப்பாக இருந்தாலும் அடுத்து வெங்கட் பிரபுவுடனான கூட்டணியை பற்றிய அப்டேட்டும் சூடுபிடித்து வருகிறது. என்னதான் தளபதி68 படத்தின் அப்டேட் வந்து கொண்டிருந்தாலும் லியோ படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லியிருக்கிறார் விஜய்.

ஆனால் அதையும் தாண்டி ஏதாவது ஒரு அப்டேட்டை அவ்வப்போது வெங்கட் பிரபு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் தளபதி68படத்தில் சினேகா நடிப்பதாகவும் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் இந்தப் படத்தில் இணைந்திருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதையும் படிங்க: விக்னேஷ் சிவனை கிஸ் அடிச்சி வாழ்த்து சொல்லும் நயன்தாரா!.. உங்க ரொமான்ஸ் வேற லெவல்!.

ஆனால் யார் வேண்டுமென்றாலும் நடிக்கட்டும். இந்த ஒரு நடிகர் மட்டும் நடிக்கக் கூடாது என்று விஜய் சொன்னதாக வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார். முன்பு ஒரு சமயம் வெங்கட் பிரபு , விஜய், பிரேம்ஜி சந்தித்துக் கொண்ட போது விஜய் பிரேம்ஜியிடம் ‘ நானும் உன் அண்ணனும் சேர்ந்து படம் பண்ணும் போது கண்டிப்பாக நீ நடிக்கக் கூடாது ’ எனக் கூறினார்.

மேலும் ‘ நீ தல ஆளுதானே. எனக்கு நல்லா தெரியும். வேண்டுமென்றால் அந்தப் படத்தில் மியூசிக் பண்ணு. ஆனால் நடிக்க கூடாது’ என்று சொன்னாராம் விஜய். அதற்கு பிரேம்ஜி  ‘அண்ணா அண்ணா தயவு செய்து அப்படி சொல்லாதீர்கள். ஏற்கனவே உங்க ரசிகர்கள் என்ன கழுவி கழுவி ஊத்துராங்க’ என்று கெஞ்சினாராம் பிரேம்ஜி.

இதையும் படிங்க: என்னய்யா!… எங்களுக்கு ஆப்பு வச்சிருவீங்க போலயே… அதிர்ந்து போன இறைவன் படக்குழு…

இப்படி விஜய் ஒரு விஷயத்தை நம்பி வெங்கட் பிரபுவுடன் சொன்னதை எல்லாவற்றையும் மேடை போட்டு சொல்லிக் கொண்டே வருகிறார். விஜயும் ஒவ்வொரு முறை வெங்கட் பிரபுவை கூப்பிட்டு கண்டித்துக் கொண்டும் வருகிறார். ஆனால் நம்ம இயக்குனர் திருந்திய பாடில்லை.

google news
Continue Reading

More in Cinema News

To Top