Connect with us

Bigg Boss

நீங்க வெளியில போய் சண்டை போடுங்க.. பொடணியில் தட்டி வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்..!

Bigg Boss Tamil: ரியாலிட்டி ஷோக்களிலேயே புது மைல்கல்லை பிடித்தது என்னவோ பிக்பாஸ் தான். ஒரே வீட்டில் அவர்கள் செய்யும் அலப்பறைக்கு எக்கசக்க ரசிகர்கள் இருப்பார்கள். அப்படி இருக்க நிகழ்ச்சியின் எலிமினேஷனுக்குமே எக்கசக்க ஆச்சரியங்கள் இருக்கும். 

பிக்பாஸ் தமிழ் 7வது சீசன் நடைபெற்று வருகிறது. எந்த சீசனிலும் இல்லாத புதுமையாக இந்த முறை இரு வீடு கான்செப்ட் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரிய அளவிலான டாஸ்குகள் இல்லாமல் ஒரே பேச்சு சத்தம் மட்டுமே அதிகமாக கேட்டு வந்தது.

இதையும் வாசிங்க:நான் அப்படி செஞ்சிருக்கவே கூடாது! அத்தனை பேர் இருக்கிற இடத்துல விஜயை உதாசீனப்படுத்திய நடிகர்!

இதனை ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்தனர். கடந்த வாரம் நடந்த ஆக்சிஜன் டான்ஸ்கில் நிறைய சலசலப்பு இருந்தது. கண்ணாடி கதவு உடைக்கப்பட்டது. முக்கியமாக பிரதீப்பை தூக்கி பொத்தென கீழே அடித்த விஜய் வர்மா விவகாரம் அதிக அளவில் சர்ச்சையானது.

இந்நிலையில் வார இறுதியில் கமல் என்ன சொல்ல போகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். காலையில் வெளியிடப்பட்ட ப்ரோமோவில் எப்போதும் போல புரியாத மாதிரி பேசாமல் தெளிவாகவே ஒரு இக்கு வைத்தார்.

அப்போதே கிட்டத்தட்ட எலிமினேஷன் இவராக தான் இருக்கும் என பலரும் பேசி வந்தனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். முதலில் வோட்டிங்கில் கடைசியாக இருந்தது அக்‌ஷயாவும், வினுஷாவும் தானாம்.

இதையும் வாசிங்க:பாலா முன்னாடி மீசையை முறுக்கிட்டு நின்னா சும்மா விடுவாரா? படப்பிடிப்பில் நடிகருக்கு ஏற்பட்ட நிலைமை

ஆனால் விஜய் எலிமினேட் எனக் கூறப்படும் நிலையில் ஒரு வேளையில் ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்படுகிறாரா? இல்லை அவர் செய்த செயலால் ஓட்டுக்கள் கிடைக்காமல் வெளியேறி இருக்காரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

Continue Reading

More in Bigg Boss

To Top