×

பிக்பாஸ் வீட்டில் அடிதடி... அர்ச்சனாவை குடுமி பிடித்து அடித்த நிஷா!

ரணகளமான பிக்பாஸ் வீடு - அர்ச்சனாவுக்கு கும்மியடி கொடுத்த நிஷா

 
பிக்பாஸ் வீட்டில் இதுவரை கொடுக்கப்பட்ட டாஸ்க்கிலே இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் மணிக்கூண்டு டாஸ்க் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. முதல் ப்ரோமோவில் கூறியபடி குழாய் சண்டை போட்டு அடித்துக்கொண்டனர் நிஷா - அர்ச்சனா.

கோபத்தை அடக்கமுடியாத அறந்தாங்கி நிஷா ஒரு கட்டத்தில் அர்ச்சனாவை வாடி போடி என திட்டு குடுமியை பிடித்து அடித்துவிட்டார். ஆனால், இது உண்மையான சண்டை இல்லை. இதுவும் ஒரு டாஸ்க். இந்த ப்ரோமோவில் சண்டை போடுவது நன்றாக இருந்தாலும் எடிட்டர் எடிட்டிங்கை ஒழுங்காக செய்யவில்லை.

ப்ரோமோ சூடு பிடிக்கும் அளவிற்கு சண்டை , கோபம் , வாக்குவாதத்தை மட்டும் கேப்ஷன் பண்ணி கொடுத்திருந்தால் நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பதை காண மக்களுக்கும் ஆர்வம் தூண்டியிருக்கும். ஆனால், இது வெறும் நடிப்பு என்பது தெளிவாக படம் போட்டு காட்டுவதற்கு எதற்கு ப்ரோமோ வெளியிடனும்...? ஸ்ட்ரைட்டா ஷோவையே பார்த்துக்கலாமே...

From around the web

Trending Videos

Tamilnadu News