Categories: Cinema News latest news television

வைரலாக நினைத்து மோசமா இறங்கிய பிக்பாஸ் தனலட்சுமி.. ஏம்மா நீ இன்னும் திருந்தவே இல்லையா..

Biggboss Dhanalakshmi: தமிழ் பிக்பாஸில் முதல்முறையாக பெரிய புகழ் இல்லாத சாதாரண குடும்பத்தில் இருந்து இறக்கப்பட்டவர் தனலட்சுமி. ஆனால் அவரிடம் ஆட்டம் முதல் நாளில் இருந்து வெறித்தனமாக இருந்தது. பிக்பாஸ் சீசன் 6ல் அசீமிடம் மட்டுமில்லாமல் எல்லாரிடமும் முட்டினார்.

சண்டைக்கு பஞ்சமில்லாமல் டாஸ்கில் மாஸ் காட்டிய தனலட்சுமியை பிக்பாஸ் ரசிகர்கள் மறக்கவே முடியாது. அதேவேளையில் அம்மணி அவ்வப்போது அழுதுக்கொண்டு பிக்பாஸ் கேமராவுக்கு முன் போய் நின்று என்னை வீட்டுக்கு அனுப்புங்கள் எனவும் பேசும் காமெடியை இன்று வரை யாருமே மறந்து இருக்க மாட்டார்கள்.

இதையும் படிங்க : தளபதி69க்கு விஜய் வைத்திருக்கும் ஐடியா இதுதான்… வேற இயக்குனருக்கு வாய்ப்பே இல்ல!

பைனல் வரை போவார் என நினைத்த நிலையில், திடீரென தனலட்சுமி ரசிகர்களிட்ன் வெறுப்பை சந்தித்து வெளியேறினார். அதை தொடர்ந்து நிகழ்ச்சிக்குள் கெஸ்ட்டாக வந்தவர். அசீமுக்கு ஓபனாகவே தன்னுடைய ஆதரவை சொல்லி இருந்தார். ஆனால் இவர்கள் இருவரும் தான் நிறைய சண்டையை நிகழ்ச்சியில் போட்டு இருந்தனர்.

பிக்பாஸ் முடிந்து தனலட்சுமிக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. இன்ஸ்டாவில் மட்டுமே தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். இருந்தும் அவருக்கு பழைய புகழ் எதுவும் தற்போது வருவது இல்லை. இதை மீண்டும் பிடிக்க அம்மணி கையில் எடுத்திருக்கும் ஐடியா தான் தற்போது விமர்சிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இன்ஸ்டாவில் கண்ணீர் விட்ட படி ஒரு வீடியோவை பதிவேற்றினார்.

இதையும் படிங்க : அந்த நடிகை வீடியோவதான் மொபைல்ல பாத்துக்கிட்டே இருப்பேன்!.. ராஜமவுலிக்கு இப்படி ஒரு ஆசையா?..

அந்த வீடியோவில் ஒரு குரல் என்ன அழுது வீடியோ போட்டே எனக் கேட்க ரொம்ப நாளா எதுவும் போடல. அதான் வைரல் ஆக சும்மா போட்டுவிட்டேன் என அவர் சொல்லும் பதிலை கேட்ட ரசிகர்கள் எமோஜியிலேயே வறுத்தெடுத்து வருகின்றனர். ஏம்மா இப்படி!

தனலட்சுமி வீடியோவைக் காண: https://www.instagram.com/p/C1Hk9BfPUjS/

Published by
Shamily