×

என்ன தம்பி சான்ஸ் எதுவும் கிடைக்கலையா...? பிக்பாஸ் தர்ஷனின் நிலைமையை பாருங்க!

போட்டோ ஷூட் நடத்தி வாய்ப்பு தேடும் தர்ஷன்

 

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்தவர் தர்ஷன். மாடல் அழகனான இவர் இலங்கையில் இருந்து வந்து இங்கு பேமஸ் ஆனார். பிக்பாஸில் ஆரம்பத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்த தர்ஷன் பின்னர் நாட்கள் செல்ல செல்ல selfish ஆக நடந்துகொண்டதால் அந்நிகழ்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸில் இருந்து வெளியில் வந்தததும் கமல் ஹாசனுடன் சேர்ந்து இந்தியன் 2 படத்தில் நடக்கவுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் , உண்மையில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இதற்கிடையில் நடிகை சனம் ஷெட்டியை காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்துவிட்டு ஏமாற்றி விட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

இதுவே இவரது ஆரம்பகால திரைப்பயணத்தில் துரதிஷ்டவசமாக அமைந்துவிட்டது. ஆனால், மனம் தளராமல் தொடர்ந்து படவாய்ப்புகளை தேடி வரும் தர்ஷன் தற்ப்போது ஹீரோயின்களை போன்று போட்டோ ஷூட் வித்தையை கையில் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களில் தர்ஷன் அழகாக , ஹேண்ட்ஸமாக தான் இருக்கிறார். இருந்தும் என்ன பயன்...? மக்கள் மனதில் இடம் பிடிக்கவில்லையே.. இப்படியே போனால் இன்னும் கொஞ்சம் நாளில் தர்ஷனா அது யாரு..? என கேட்கும் அளவிற்கு மறந்துவிடுவார்கள் மக்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News