×

அஜித் ஒரு மகாத்மா... உருக்கமாக பேசும் பிக்பாஸ் சுரேஷ்... வைரலாகும் வீடியோ

 

தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அழகன்’ திரைப்படம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஒரு பழைய பேட்டியில் நடிகர் அஜித்தை பற்றி அவர் பேசியுள்ளார். அஜித் ஒரு மகாத்மா. அவரை ஒரு பேட்டியில் இயக்கியுள்ளேன். என்னிடம் நிறைய விஷயம் பேசியுள்ளார். குழந்தை போல் பேசுவார்.  

அவர் வரும் போதே அவரிடம் ஒரு பிரகாசம் தெரியும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல் அவர் முகத்தை பார்த்தாலே அவர் எவ்வளவு நல்லவர் என்பது தெரியும்.சினிமா உலகில் யாரை கேட்டாலும் ஒருவர் கூட அவரை பற்றி தவறாக பேச மாட்டார்கள். அவருடன் ஒரு படத்திலும் நடித்துள்ளேன். மற்றொரு படத்தில் இருவரும் நடிக்கவிருந்தோம். ஆனால், எங்கள் இருவரையும் அப்படத்திலிருந்து தூக்கிவிட்டனர் என அவர் பேசியுள்ளார்.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News