Connect with us

latest news

Biggboss Tamil: போட்டியாளராக உள்ளே இறங்கும் டிடியின் காதலர்… அட இந்த பிரபலமா?

Biggboss Tamil: தமிழ் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அடுத்த மாதம் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இதில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த கிசுகிசுப்புகள் இணையத்தில் கசிந்து வருகிறது. அந்த வகையில் முக்கிய பிரபலம் ஒருவரும் இணைய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

100 நாள் ஒரே வீட்டில் 60க்கும் அதிகமான கேமராக்கள் முன்னால் முக்கிய பிரபலங்கள் வாழ்ந்து நிரூபிப்பது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இதுவரை ஏழு சீசன்கள் முடிந்து இருக்கிறது.

இதையும் படிங்க: விஜய் மேல் மகனுக்கும், மகளுக்கும் அப்படி என்ன கோபம்? குடைந்து எடுக்கும் பயில்வான்

எக்கச்சக்கமான வைரல் நிகழ்வுகளை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் அதிர்ச்சியாக கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்த தொகுத்து வழங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவியது. இதில் ரசிகர்கள் நினைத்தது போலவே பிக் பாஸ் ஆக விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இவரின் முதல் ப்ரோமோ சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த ப்ரோமோக்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு புறம்,  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சீசன் பெரிய அளவில் ரீச் கிடைக்காமல் போக இந்த சீசனை ஹிட் அடிக்க வேண்டும் என்பது தயாரிப்பு நிறுவனத்தின் முடிவாகி இருக்கிறது. இதனால் இந்த சீசனில் நிறைய பிரபலங்கள் ரசிகர்களுக்கு பிடித்தமானவர்களாக உள்ளே இறக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: வேண்டாம் வந்துராதீங்க.. ரொம்ப கஷ்டப்பட்டு வெளியில வந்தோம்… கண்ணீர்விடும் விஜய் ரசிகர்கள்

அந்த வகையில் சில போட்டியாளர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த சீசனிலும் விஜய் டிவி முகங்கள் சில இருக்கும் என்றே கூறப்படுகிறது. அதில் முக்கிய நபராக விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தீபக் உள்ளே வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

#image_title

சில காலம் தொகுப்பாளராக இருந்து வந்த தீபக் தற்போது சின்னத்திரை நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் விஜய் டிவியில் நிறைவடைந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் ஆரம்ப காலங்களில் நடிகர் டிடியின் காதலர் என்றே கிசுகிசுப்புகள் எழுந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி ஒன்றாக வலம் வந்தாலும் திடீரென தீபக் திருமணம் செய்து கொண்டு விஜய் டிவியிலிருந்து விலகியதும் இவர்கள் பிரேக் அப் செய்து கொண்டதாக பின்னர் தகவல்கள் வெளியாகிறது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top