Categories: Bigg Boss latest news television

நிக்‌ஷனுக்காக இன்னொரு பலியாடு.. பிக்பாஸில் இந்த வார எலிமினேஷன் இவர் தானா..?

Biggboss Tamil: தமிழ் பிக்பாஸில் ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் எலிமினேஷன் ரிசல்ட்டால் அப்செட் மோடுக்கு போவது வாடிக்கையாகி விட்டது. இந்த வாரமும் அவர்கள் எதிர்பார்த்த போட்டியாளர் வெளியேறாமல் வேறு ஒரு போட்டியாளரே எலிமினேட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கிட்டத்தட்ட் தமிழ் பிக்பாஸில் 6சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசன் படுமொக்கை ஆகி இருக்கிறது. ஒரு டாஸ்க்கும் இல்லாமல் ஊர்வம்பு பேசுவது போல போட்டியாளர்களை பேச வைத்து கண்டெண்ட் எடுத்தே 75 நாட்களை ஓட்டிவிட்டனர். அதனால் அதிக வெறுப்பை சம்பாதித்தது இந்த சீசன் தான்.

இதையும் படிங்க: என்னது இது சிவாஜி இயக்கிய படமா? ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த அந்த படம் எதுனு தெரியுமா?

கிட்டத்தட்ட் இந்த சீசன் போட்டியாளர்களுக்கு புல்லி கேங் என நெகட்டிவ் பேர்களே அதிகம். கிட்டத்தட்ட ஒருவர் கூட அதிகப்பட்ச ஆதரவை பெறவில்லை. இதில் ப்ரதீப் மட்டும் கொஞ்சம் நல்ல பேர் வைத்து இருந்த நிலையில் அவரை தேவையே இல்லாமல் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றி அவருக்கு ஓவர் பாசிட்டிவ் இமேஜை ஏற்றி விட்டனர். சமீபத்தில் வைல்ட் கார்டாக உள்ளே வந்த அர்ச்சனா, தினேஷ் வரை தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இதனால் கமல் மீதே நெகட்டிவ் விமர்சனம் அதிகமாக இன்னும் 25 நாளு தானே முடிச்சிக்கொடுத்துட்டு நான் கிளம்புறேன்டா. இனிமே என்னை கூப்பிடாதீங்க என்ற லெவலுக்கு தொகுப்பாளராகவே இனி நான் வர மாட்டேன் எனச் சொல்லி விட்டாராம். அந்த அளவுக்கு நெகட்டிவ் அதிகமாகி இருக்கிறது.

இதையும் படிங்க: ஒரு படத்துக்கு இசையமைத்த ஐந்து இசையமைப்பாளர்கள்… பாட்டு எல்லாமே ஹிட்டு.. என்ன படம் தெரியுமா?

Published by
Shamily