Connect with us
billa

Cinema News

‘மை நேம் இஸ் பில்லா’ பாடல் உருவான சோக கதை! யுவனின் சோம்பேறித்தனத்தால் ஸ்தம்பித்த ‘பில்லா’ டீம்

Billa: தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்து வந்த அஜித்திடம் வேண்டுமென்றால் பில்லா படத்தின் ரீமேக்கில் நடித்துப் பாருங்களேன் என்று ரஜினி சொன்ன ஐடியா இன்று அஜித்துக்கு அந்தப் பில்லா படம்தான் ஒரு பென்ச் மார்க்கை கிரியேட் செய்திருக்கிறது. அஜித்தின் ஸ்டைலான ஸ்வாக் பில்லா படத்தில் வொர்க் அவுட் ஆனது. அதிலிருந்துதான் அஜித்தை ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்தார்கள்.

2007 ஆம் ஆண்டு ரிலீஸான பில்லா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுவும் ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக் என்பதால் ரஜினி ரசிகர்கள் உட்பட அனைவரும் அஜித்தை இந்தப் படத்திற்கு பிறகு கொண்டாட ஆரம்பித்தனர். விஷ்ணு வர்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் பில்லா படம் வெளியானது.

இதையும் படிங்க: தளபதி என்கிட்ட அந்த டயலாக்கை தான் சொல்ல சொல்லி கேட்பாரு!.. அரிசி மூட்டை ஜெனி தியேட்டரில் ஆட்டம்!..

இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நமீதா ஆகியோர் நடித்திருப்பார்கள். கூடவே பிரபு, ரகுமான், சந்தானம் போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தின் மூலம்தான் நயன் முதன் முதலில் பிகினி உடையில் நடித்திருப்பார். இதை பற்றி கூறிய விஷ்ணு வர்தன் ‘ நயன் பக்கா சவுத் இந்தியன் ஹோம்லி லுக்கில் இருக்கக் கூடிய நடிகை. அவரை இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க வைத்தால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என நினைத்து நான் நடிக்க வைத்தேன்’ என கூறினார்.

மேலும் படத்திற்கு கூடுதல் ப்ளஸாக இருந்தது அந்த ‘மை நேம் இஸ் பில்லா’ பாடல்தான். நாளைக்கு படப்பிடிப்பு என்றால் அதற்கான செட் எல்லாம் போட்டு விட்டார்களாம். ஆனால் யுவன் அதுவரை பாடலை கொடுக்கவே இல்லையாம். விஷ்ணுவர்தன் என்னாச்சு யுவன்? இன்னும் பாடல் கொடுக்கல என கேட்க, அதற்கு யுவன் ‘இதோ வந்துவிடும்’என்று சொல்லியே கடைசி வரை பாடலை கொடுக்கவே இல்லையாம்.

இதையும் படிங்க: மாரி செல்வராஜ் படத்துல நடிக்கிறேனா?.. திடீரென கேட்ட கேள்விக்கு டென்ஷனான கவின்.. என்ன ஆச்சு?..

அதனால் பாடல் இல்லாமலேயே அந்தப் பாடல் காட்சியை படமாக்கினாராம் விஷ்ணு. இதற்கு டான்ஸ் மாஸ்டர் கல்யாண் ‘எப்படி மியூஸிக் இல்லாமல் டான்ஸ் ஆட வைப்பது?’ என கேட்டிருக்கிறார். இருந்தாலும் விஷ்ணு அவருக்கு தேவையான ஸ்டைலை மியூஸிக் இல்லாமல் அஜித்தை வைத்து எடுத்து விட்டாராம். அதன் பிறகு யுவன் பிட்டு பிட்டாக பாடலை அனுப்பினாராம்.

இதை பார்த்த அஜித் ‘என்ன விஷ்ணு இது?’ என கேட்க, அதற்கு விஷ்ணு ‘சார் இன்னும் பாடல் ரெடி ஆகல’ என சொல்லியிருக்கிறார். அதற்கு அஜித் ‘சரி ஓகே பரவாயில்லை’ என்று சொல்லிவிட்டு இப்படியே பிட்டு பிட்டாக அந்த பாடல் காட்சியை படமாக்கினார்களாம். ஆனால் திரையில் பார்க்கும் போது அந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை சொல்லி மாளாது.

இதையும் படிங்க: ‘வின்னர்’ படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோயின்! திடீரென நடந்த ட்விஸ்ட்.. சுந்தர் சி பகிர்ந்த சீக்ரெட்

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top