Categories: latest news Review

பிளாக்மெயிலுக்கே ஆப்பு வச்ச புளூசட்டைமாறன்… கடத்தல்ல ஒரு சுவாரசியம் வேண்டாமா?

பிளாக்மெயில் படத்தின் விமர்சனத்தை பிரபல யூடியூபரும் சினிமா விமர்சகருமான புளூசட்டைமாறன் புட்டு புட்டு வைக்கிறார். வழக்கமாக வறுத்தெடுக்கும் அவர் இந்தப் படத்துக்கு என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்.

இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் நேற்று வெளியான படம் பிளாக்மெயில். படத்தோட கதை என்னன்னா ஆரம்பத்துல பெரிய தொழிலதிபர் ஸ்ரீகாந்தும், அவரது மனைவி இந்துமதியும் கார்ல தங்களோட குழந்தையோட ஊட்டி மலையில போய்க்கிட்டு இருக்காங்க. அங்கே ஒரு சின்ன விபத்து. இன்னொரு கார்காரன் கூட பெரிய சண்டை. அது முடிஞ்சதும் கோபத்துல காரை எடுத்துட்டுக் கிளம்புறாரு. திரும்பிப் பார்த்தா குழந்தையை சீட்ல காணோம்.

எங்கடா போச்சுன்னு தேடுறாரு. இங்க கட் பண்ணினா சில நாள்களுக்கு முன்புன்னு காமிக்கிறாங்க. முழு படமுமே நான் லீனியர்ல தான் போகுது.

ஹீரோ ஜி.வி.பிரகாஷ் ஒரு மெடிக்கல் கம்பெனியில டெலிவரி பாயா இருக்காரு. ஒரு வேன்ல மருந்து பொருள்களை (கூட்ஸ்) ஏற்றிட்டுப் போறாரு. வேன் காணாமப் போகுது. கூட்ஸோடு காணாமல் போனதால் 50 லட்ச ரூபாயாக் கொடுத்துட்டு உன் காதலியைக் கூட்டிட்டுப் போன்னு முதலாளி சொல்லிடுறாரு ஹீரோவுக்கு காதலியைக் காப்பாற்ற 50 லட்ச ரூபாய் பணம் வேணும். இந்தச் சூழல்ல பிந்துமாதவியோட முன்னாள் காதலன் அவளை பிளாக்மெய்ல் பண்றாரு.

blackmail

நீ 2 கோடி ரூபாய் பணம் வாங்கிக் கொடு. இல்லன்னா உன் புருஷன்கிட்ட நம்மோட தொடர்பைப் பத்தி சொல்லிடுவேன்னு சொல்றாரு. என்னால அவ்ளோ பெரிய தொகை எல்லாம் கொடுக்க முடியாதுன்னு சொல்றாங்க. உடனே அந்தத் தொகையை வாங்க குழந்தையைக் கடத்த திட்டம் போடுறாரு. இந்த சூழல்லதான் குழந்தை காணாமப் போகுது. குழந்தையை யார் கடத்துனாங்கறதுதான் கதை.

குழந்தை காணாமப் போனதும் நமக்கு ஒரு பயம் வந்தா மட்டும்தான் இந்தக் கடத்தல்ல ஒரு மீனிங் இருக்கும். அதை விட்டுட்டு பொண்ணை யார் கடத்துனா? எப்படி கடத்துனாங்கன்னு அந்த ஏரியாக்குள்ள எல்லாம் நாம போறது இல்ல. ஏன்னா இந்த ஏரியால ஆழமான ஃபீலிங் இல்லாததனால மேற்கொண்டு படத்தைப் பார்க்குறதுல பெரிசா இன்ட்ரஸ்ட் இல்ல. இவங்க டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் வச்சிருக்காங்க. படத்துல 10 கேரக்டர் வருது. அவங்ககிட்ட தான் அந்தக் குழந்தையும் போய் மாட்டுது.

பர்ஸ்ட் ஆஃப்ல உள்ள வேகம் செகண்ட் ஆஃப்ல இல்ல. அவங்க தேவைக்கு ஸ்கிரிப்டை வளர்த்துக்கிட்டாங்க. படத்தோட ஆரம்பத்துல சில கேரக்டரைக் கொண்டு வராங்க. ஆனா அது கடைசி வரை அப்படியே இருக்கு. ரொம்ப நல்ல படமா வந்துருக்க வேண்டிய படம் இப்ப ரொம்ப சுமாரா போச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v