Categories: Cinema News latest news

ரஜினியை பார்த்து ‘தலைவா’ என்று கத்திய மூன்று வயது சிறுவன்! தனஞ்செயன் பெருமிதம் – சவுக்கடி கொடுத்த ப்ளூசட்டை மாறன்

‘ஜெயிலர் படத்தை  தியேட்டரில் பார்த்போது மூன்று வயது சிறுவன் ‘தலைவா’ என்று திரையை பார்த்து கத்தினான். அவனுக்கு என்ன தெரியும். பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை ரஜினி சாரை கொண்டாடுகிறார்கள். அந்த பையனை கூப்பிட்டு கேட்டேன். எதுக்கு தலைவனு சொல்றனு? அது ஒரு வித சந்தோஷம் என்று சொல்கிறான். அவனை வீடியோ எடுக்கலாம்னு நினைச்சேன் முடியல’ என்று ஒரு பேட்டியில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ப்ளூசட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார். அது பின்வருமாறு:  . அந்த பையன் கிட்ட ‘நாட்டுக்கு பாடுபட்ட காந்தி, காமராஜர், பகத்சிங் போன்றோரை தலைவா என்று சொல்றதுதான் சரி’ ன்னு சொல்லிட்டு வரலையா சார்?

இதையும் படிங்க : குக் வித் கோமாளியில் கலந்து கொண்டது இவரால் தான்… வலிமை ஷூட்டிங்கில் ஒரே சண்டை… ஷாக் கொடுக்கும் கிரண்

அதை விட்டுட்டு அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை செல்போன்ல வீடியோ எடுக்கலைன்னு வருத்தம் வேற படறீங்க. ஒரு சாதாரண படத்துக்கு இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டிய அவசியம் என்ன சார்? மூணு வயசு பையனை பத்தி திரும்ப திரும்ப பேசுறீங்க. விட்டுருங்க.

அந்த தலைமுறையாவது உண்மையான, உருப்படியான தலைவர்களை பத்தி படிக்கட்டும். படிச்ச நீங்களும்… …வளர்ந்து வரும் புதிய தலைமுறையை.. ஹீரோயிச மோகத்துக்கு நேரடியாவோ, மறைமுகமாவோ தூண்ட காரணமா இருக்காதீங்க என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: ‘ஜெய்லர்’ படத்தின் மொத்த வசூலே இவ்ளோதானா? பெருமூச்சு விடும் ஆண்டவர் – என்னம்மா உருட்டுறாங்க

இதை பார்த்த பல பேர் ப்ளூ சட்டை மாறன் எல்லா படங்களையும் படு மோசமாக விமர்சித்து வந்தாலும் இது ஒரு வித சமூகத்திற்கு  தேவையான நல்ல கருத்தைத்தான் சொல்கிறார் என்று பதிவிட்டு வருகின்றனர். ஏனெனில் அவர் கூறுவதை போல் இன்றைய இளைஞர்கள் தான் நாளைய இந்தியாவை ஆளப் போகிறவர்கள். அவர்கள் இப்படி சினிமா மோகத்தில் அடிமைப்பட்டு கிடப்பது என்பது எந்த விதத்திலும் நியாயமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini