தமிழ்நாட்டோட நிலைமையை பார்த்தீங்களா!.. குருவி ஹீரோ, தயாரிப்பாளர்.. ப்ளூ சட்டை மாறன் அட்டாக்!..
தமிழக அரசியல் சூழலில் நேற்று விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், இன்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றனர். அப்போது, வெற்றி பெற்ற எம்.எல்.ஏ மற்றும் எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படங்களில் ஒன்றான குருவி படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்தார். இந்த திரைப்படத்தை இயக்குநர் தரணி இயக்கியிருந்தார். ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த இந்த படம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.மேலும், இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இசையை வித்யாசாகர் அமைத்திருந்தார்.
மேலும்,குருவி திரைப்படத்தில் ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக இணைந்திருந்த விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையில் திரைப்பட வெளியீடுகள், திரையரங்கு ஒதுக்கீடு, அரசியல் செல்வாக்கு போன்ற விவகாரங்களிலும் இணையத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் பரவினாலும், அவர்கள் நேரடியாக ஒருவரை ஒருவர் தாக்கி பொதுவெளியில் கடுமையான கருத்துகளை பதிவு செய்த சம்பவங்கள் குறைவாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உதயநிதி பதவியேற்கும் வீடியோவை பகிர்ந்த திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், “குருவி படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளரும்” என இருவரும் எதிரெதிராக சட்டமன்றத்தில் சந்தித்துக் கொண்டதை பார்த்து கமெண்ட்டை பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி, அரசியல் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
