பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் போனிகபூர் அண்மைகாலமாக தமிழ் திரைப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அஜித்தை வைத்து ஏற்கனவே இரண்டு படங்களை தயாரித்துள்ளார் போனி கபூர். தற்போது அஜித்தின் 61வது திரை படத்தையும் தயாரித்து வருகிறார்.
அதேபோல அண்மையில் அவர் தயாரிப்பில் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி எனும் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதனை தொடர்ந்து அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் வீட்ல விசேஷம் எனும் திரைப்படம் வெளியாக உள்ளது.
அண்மையில், போனி கபூரின் கிரெடிட் கார்ட் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு அதன் மூலம் சுமார் 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக திருடப்பட்டுள்ளதாம்.
இதையும் படியுங்களேன் – ரகசியம் வெளியே தெரிஞ்சிடுச்சே.! அப்செட்டில் நயன்தாரா.! தேதி மற்றும் விலாசம் இதோ..,
இதனை அறிந்த போனிகபூர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அந்த கிரெடிட் கார்டை பிளாக் செய்து விட்டாராம். அதுமட்டுமல்லாமல் மும்பை போலீசாரின் இந்த கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக புகார் அளித்துள்ளாராம். இதனை வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனராம்.
அண்மைக்காலமாகவே இந்த கிரடிட் கார்டு மோசடி என்பது கொஞ்சம் அதிகமாக தென்படுகிறது. இதற்கு அரசுதான் உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என்பது மக்களின் பொதுவாக கோரிக்கையாக உள்ளது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…