×

ஒரு முடிவுக்கு வாங்கப்பா! எல்.கே.ஜி. யு.கே.ஜி விடுமுறை நிறுத்தி வைப்பு..

கொரோனா வைரஸ் காரணமாக எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
 

நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 83 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு அதில் 2 பேர் இறந்து விட்டனர்.

கேரளா, டெல்லி உட்பல பல மாநிலங்களுக்கும் இந்நோய் வேகமாக பரவி வருவதால் தமிழகத்திலும் இந்நோய் பரவி விடுவோ என்கிற அச்சம் தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, வருகிற 16ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளிப்பதாக நேற்று மாலை அறிவித்தது. 

இந்நிலையில், தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News