×

மகனை கட்டிப்பிடிக்க கூட முடியலயே!. மணிரத்னம் பட நடிகை புலம்பல்...

 

கொரோனா வைரஸ் சாதாரண மக்களை மட்டுமின்றி எப்போதும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கும் திரை பிரபலங்களையும் பதம் பார்த்து வருகிறது. பாலிவுட்டில் ஏற்பகவே, அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவரின் மகள் என பலரும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் மகன் அர்ஜூன் கபூருடன் லிவிங் டூ கெதரில் வசித்துவரும் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.எ னவே, வீட்டிலேயே அவர் தன்னை தனிமைபடுத்திக்கொண்டார். 

இந்நிலையில், அருகில் இருந்தும் தனது மகனை கட்டியணைக்க முடியவில்லை என அவர் புலம்பியுள்ளார். முன்னாள் கணவர் மூலம் அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். தூரத்தில் தனது மகனும் செல்ல நாய்க்குட்டியும் ஏக்கத்துடன் நிற்கும்  புகைப்படத்தை வெளியிட்டு ‘அவர்கள் என்னிடம் பேசுகிறார்கள். ஆனால், கட்டியணைக்க முடியவில்லை. இன்னும் சில நாட்கள்தான். அவர்களின் இனிமையான முகம் எனக்கு சக்தியையும், உற்சாகத்தையும் தருகிறது’ என பதிவிட்டுள்ளார்.

மலைக்கா அரோரா மணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ படத்தில் தையா தையா பாடலுக்கு நடனமாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web

Trending Videos

Tamilnadu News