Categories: Cinema News latest news

அந்தமாதிரி நடந்தாலும் எனக்கு பரவாயில்லை… மெட்ராஸ் நாயகியின் அதிரடி பதில்..!

பா.ரஞ்சித் இயக்கத்தில், கார்த்தி நடித்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மெட்ராஸ். இந்த திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.

அதன் பிறகு கதகளி, கலகலப்பு 2, கணிதன் என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் அருவம் எனும் சித்தார்த் நடித்த படத்தில் நடித்திருந்தார். அதன் பெரிய பெரிய வாய்ப்பு எதுவும் தமிழில் இல்லை தெலுங்கில் ஓரிரு படஙக்ளில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்களேன்  –  கொஞ்ச நேரத்தில் தளபதி ரசிகர்களை அதிர வைத்த வரலட்சுமி.! விஜயின் புது லுக்.! வைரலாகும் புகைப்படங்கள்…

இவர் நடித்த படங்கள் அதிகமாக இரு ஹீரோயின் கதைக்களம் கொண்ட படங்களாக அமைந்து விடுகிறது. இது பற்றி அவரே கூறுகையில், ‘ இது பற்றி நான் கவலைப்படுவதில்லை. அந்த மாரி நடந்தாலும் பரவாயில்லை. ஸ்ரீதேவி, ஜெயசுதா, ஜெயபிரதா உள்ளிட்ட பிரபல நடிகைகளே, தங்களுக்கு மார்க்கெட் இல்லாத சமயம் இப்படி 2 ஹீரோயின் படங்களில் நடித்து தங்களது இடத்தை தக்கவைத்து உள்ளனர் என மிக பாசிட்டிவாக பதில் அளித்துள்ளார் கேத்ரின் தெரசா.

இதையும் படியுங்களேன்  –  அவருக்கு நாங்க செய்யாமலா.? அதிரடி நாயகன் பேச்சு.! கேப்டன் விஜயகாந்திற்கு என்ன பண்ண போறாங்கனு தெரியுமா.?!

அண்மையில் இவர் நடித்த பிம்பிசாரா  எனும் தெலுங்கு திரைப்படம் அங்கு மிக பெரிய வெற்றியை பெற்றது. அதே போல அடுத்து நடித்த மாச்சேர்லா நிவோஜகவரங்கம் (ராமோ ராமோ சின்னதோ பாடல் வைரல் ஹிட் கொடுத்த படம்) படம் பெரிய வெற்றியடையவில்லை என்றாலும், பாட்டு படத்தை காப்பாற்றிவிட்டது.

Manikandan
Published by
Manikandan