×

தனது குருநாதர் கொடுத்த விருதை திருப்பிக் கொடுத்த சேரன் – சர்ச்சையை உருவாக்கிய ராஜாவுக்கு செக்!

பிஹைண்ட்வுட்ஸ் என்ற இணையதளம் தன் படத்துக்கு விமர்சனம் எழுதவில்லை என்பதற்காக அந்த இணையதளம் தனக்கு முன்பு வழங்கிய விருதினை திருப்பிக் கொடுத்துள்ளார் நடிகர் சேரன்.

 

பிஹைண்ட்வுட்ஸ் என்ற இணையதளம் தன் படத்துக்கு விமர்சனம் எழுதவில்லை என்பதற்காக அந்த இணையதளம் தனக்கு முன்பு வழங்கிய விருதினை திருப்பிக் கொடுத்துள்ளார் நடிகர் சேரன்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த சேரன் நடிப்பில் இறங்கினார். முதலில் சில படங்கள் வெற்றி பெற்றாலும் அவரால் தொடர்ந்து நிலைக்க முடியவில்லை. இதன் காரணமாக நடிப்பு வாய்ப்பும் இல்லாமல் இயக்குனர் வாய்ப்பும் இல்லாமல் இருந்துவந்த அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதில் பிரபலமான அவருக்கு ஆன்லைன் சினிமா விமர்சன நிறுவனமான பிஹைண்ட்வுட்ஸ் ஐகான் ஆஃப் த இயர் என்ற விருதை வழங்கியது. அந்த விருதை சேரனின் குருவான கே எஸ் ரவிக்குமார் அளித்தார்.

இப்போது சேரன் நடிப்பில் ராஜாவுக்கு செக் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் பற்றி பிஹைண்ட்வுட்ஸ் இணையதளம் விமர்சனம் வெளியிடவில்லை. அதுபற்றி சேரன் கேட்டதற்கு அந்த படத்துக்கு  விமர்சனம் எழுத ஒன்றுமில்லை என சொல்லி இருக்கிறார்கள். அதனால் அதிருப்தியான சேரன் பிஹைண்ட்வுட்ஸ் இணையதளம் தனக்கு வழங்கிய விருதை திருப்பி அளித்துள்ளார். மேலும் ‘தாங்கள் கொடுத்த மெடலை அனுப்பியுள்ளேன். மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்.. சூழ்ச்சியிலே இறையாகும் பறவையல்ல சூட்டிற்குள்ளிருந்து பிறந்துவந்த பறவை.. விமர்சனங்களை செய்யாமல் என் திரைப்படங்களை வீழ்த்தலாம்.. என்னை வீழ்த்தமுடியாது.’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News