×

தளபதி ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்திய சிரஞ்சீவி சர்ஜா - டிக் டாக் வீடியோ!

நடிகர் அர்ஜுனின் அக்கா மகனான நடிகர் சிரஞ்சீவி சார்ஜா (39) நேற்று முன்தினம்  மதியம் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று மூச்சுத் திணறல் காரணமாக போராடியுள்ளார். உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுய நினைவு  இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

 

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 2018ம் ஆண்டு தமிழ் நடிகை மேக்னா ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர்.

அவரது மனைவியம், நடிகையுமான மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். சிரஞ்சீவி சார்ஜா குழந்தையை பார்ப்பதற்கு முன்னரே மரணித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை 11 மணியளவில் அவரது பண்ணை வீட்டு தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது மனைவி மேக்னா கடைசியாக கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுது முத்தமிட்டது கண்ணீரில் ஆழ்த்தியது.

இந்நிலையில்  கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்கள் முழுக்க சிரஞ்சீவி சார்ஜா குறித்த வீடியோக்களும் , செய்திகளுமாக ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது அவர் உயிரோடு இருக்கும் போது நடிகர் விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு டிக் டாக் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ லிங்க்...

From around the web

Trending Videos

Tamilnadu News