Connect with us
chitha

Cinema News

லாரன்ஸும் ஜெயம்ரவியும் ஓரமா போய் விளையாடுங்க!.. சித்தா எத்தனை கோடி வசூல் தெரியுமா?!..

Chiththa movie: சித்தார்த் நடித்த சித்தா, ஜெயம் ரவி நடித்த இறைவன், பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 ஆகிய படங்கள் கடந்த செப்டம் மாதம் 28ம் தேதி ஒன்றாகவே வெளியானது. சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினி நடித்திருந்தார். அந்த படத்தை இயக்கிய பி.வாசுவே சந்திரமுகி 2-வையும் இயக்கியிருந்தார்.

சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், ராதிகா, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்திரமுகி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்திருந்ததால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் உதட்டை பிதுக்கினார்கள்.

இதையும் படிங்க: வெற்றி மிதப்பில் மிதந்த நடிகருக்கு ஆப்பு வைத்த முருகதாஸ்… நிலைமை எப்போ வேணாலும் மாறலாம் சாரே…

எதிர்பார்த்த அளவு இல்லை.. ஏமாற்றமாக இருந்தது.. சந்திரமுகி முதல் பாகம் போல் இல்லை என பலரும் தெரிவித்தனர். ஒருபக்கம் விமர்சகர்களும் இப்படத்தை கழுவி ஊற்றினார்கள். ராகவா லாரன்ஸ் ஓவர் ஆக்டிங் செய்து சொதப்பி வைத்திருந்ததாகவும், கிரிஞ்ச் காட்சிகளை வைத்து பி.வாசு ஒப்பேற்றியதாகவும் பலரும் கூறினார்கள். இந்த படம் இதுவரை ரூ.20 லிருந்து ரூ.30 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேபோல், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் சைக்கோ திரில்லராக வெளிவந்த படம்தான் இறைவன். ஜெயம் ரவி நடித்திருந்த இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், அறுவறுக்கத்தக்க,கோரமான காட்சிகளை கொண்ட இந்த படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. எனவே, இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வி அடைந்துவிட்டது.

இதையும் படிங்க: வாயாலேயே வட சுடுறத விட்டு செயல்ல காட்டுங்க! ‘லியோ’ படத்துக்கு தயாரிப்பாளர் விடுத்த சேலஞ்ச்

ஆனால், சித்தார்த் நடிப்பில் வெளிவந்த சித்தா படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடம் பாராட்டை பெற்றது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமை சித்தார்த் எப்படி மீட்டு எடுக்கிறார் என்பதை அழகாக திரைக்கதை அமைத்திருந்தனர். இந்த படம் இதுவரை ரூ.11.5 கோடியை வசூல் செய்துள்ளது.

சந்திரமுகி 2 பட்ஜெட்டை கணக்கிட்டால் அந்த படம் வசூல் செய்தது மிகவும் குறைவு. ஆனால், சிறிய பட்ஜெட்டில் வெளிவந்த சித்தா தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிக்பாஸ்: உன்கிட்டலாம் கேட்க முடியாது.. பிரதீப்பை பங்கம் பண்ணிய விஜய்… சைடில் கெடா வெட்டிய நிக்சன்..!

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top