தமிழ் சினிமாவில் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை மிகவும் அருமையாக நடிக்க கூடியவர் விக்ரம். இதனால் என்னவோ இவருக்கு பல ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் விக்ரம் தனக்கு சிறிய வயதில் என்ன ஆக ஆசை இருந்தது என்பது குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் தான் சிறிய வயதில் இருந்த டாக்டராக ஆசைப்பட்டதாகவும், தனது குடும்பமும் அதற்காக தான் ஆசைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார. ஆனால், மார்க் பற்றாக்குறை காரணமாக மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்களேன்- உங்க மன தைரியத்தை பாராட்டியே ஆகணும் சூர்யா சார்… இணையத்தில் வச்சி செய்து வரும் ரசிகர்கள்.!
மேலும் பேசிய விக்ரம் டாக்டர் படிக்க தான் வாய்ப்பு கிடைக்கவில்லை எனவே பல் மருத்துவராகவாது ஆகலாம் என்று அதற்கும் முயற்சிகள் செய்தாராம். ஆனால், அதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பிறகு கலை அறிவியல் கல்லூரியில் படித்து பட்டம்பெற்றார்.
படிப்பு முடிந்தவுடன் நடிப்பதில் ஆர்வம் வந்தவுடன் சினிமாவிற்கு நுழைந்து தனது அசுர நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்து பலர் ரசிகர்களை உருவாக்கி கொண்டார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…