Categories: latest news Review

ஹீரோவாக ஜெயித்தாரா அதர்வா தம்பி!.. நேசிப்பாயா படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம் இதோ!..

Nesippaya: பில்லா திரைப்படத்தின் மூலமாக பிரபலமான இயக்குனர் விஷ்ணுவரதன் இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் நேசிப்பாயா. இந்த திரைப்படத்தை XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கின்றார். இன்று திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிவிட்டது.

இன்றுதான் ரவி மோகன் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருந்த காதலிக்க நேரமில்லை திரைப்படமும் வெளியானது. காதலிக்க நேரமில்லை திரைப்படத்திற்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் நேசிப்பாயா திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முழு விமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

படத்தின் கதை: அதிதி சங்கர் மீது நடிகர் ஆகாஷ் முரளிக்கு காதல் ஏற்பட அதனை அவரிடம் கூறுகின்றார். அதிதி சங்கர் ஒரு சில கண்டிஷன் போட்டு அந்த காதலை ஏற்றுக் கொள்கின்றார். அதற்கு ஆகாஷும் சம்மதிக்க இருவரும் தங்களது காதல் பயணத்தை தொடங்குகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய வேண்டிய சூழல் உருவாகின்றது.

அதன் பிறகு அதிதி சங்கர் வேலை கிடைக்க போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்கின்றார். ஆனால் அங்கு தெரியாத்தனமாக ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறை சென்று விடுகின்றார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காதலி சிறைக்கு சென்றதை அறிந்த ஆகாஷ் போர்ச்சுக்கலுக்கு சென்று அதிதியை மீட்க முயற்சி செய்கின்றார். அப்படி அதிதிக்கு என்ன ஆனது, அவர் அந்த கொலையை செய்தாரா? ஆகாஷ் அவரை எப்படி சிறையில் இருந்து மீட்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

படத்தின் விமர்சனம்: இயக்குனர் விஷ்ணுவர்தன் தமிழில் 10 வருடத்திற்கு பிறகு கம்பேக் கொடுக்கும் திரைப்படம் நேசிப்பாயா. இப்படம் அதர்வாவின் தம்பியான ஆகாஷ்-க்கு முதல் திரைப்படம் ஆகும். முதல் படம் என்பதால் நடிப்பு, சண்டை காட்சிகளில் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கின்றார். அதிதி சங்கர் பல இடங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் குஷ்பூ தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆகாஷ் முரளிக்கு இது ஒரு நல்ல அறிமுகம் என்பது எந்த சந்தேகமும் கிடையாது. அதிலும் படத்தில் சிறையில் இருக்கும் அதிதி தன்னை பார்க்க மறுப்பு தெரிவித்த போது அவர் குரலை மட்டும் கேட்டு கண்ணீர் வடித்த ஆகாஷின் நடிப்பு சிறப்பாக இருந்தது.

காதல் படமாக இருந்தாலும் பெரிய அளவு காதல் காட்சிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை. யுவனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். எப்போதும் போல தனது ஸ்டைலில் மேக்கிங் செய்திருக்கின்றார் விஷ்ணு வரதன். பாடல்கள் அனைத்துமே ரசிக்கும் படியாக இருந்தது. படத்தின் கதை ஸ்லோவாக இருப்பது போல் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை நான் கணித்து விடலாம் என்பது போல் படத்தின் காட்சி இருந்தது.

மத்தபடி சொல்லும் அளவிற்கு ஆஹா ஓஹோ என எந்த ஒரு சிறப்பான காட்சிகளை இந்த திரைப்படத்தில் அமையவில்லை என்பது ரசிகர்களின் கருத்து. படம் இன்று வெளியாகி இருந்த நிலையில் ரசிகர்கள் படத்திற்கு 2.75 % ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள். விஷ்ணுவர்தன் 10 வருடம் கழித்து இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்திருந்த நிலையில் படம் நிச்சயமாக மிக சிறப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் அந்த எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதை ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது. படத்தின் பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். யுவன் சங்கர் ராஜா தனது ஸ்டைலில் மிகச்சிறப்பாக பாடல்களை கொடுத்து இருக்கின்றார்.

ramya suresh
Published by
ramya suresh