×

20 ஆம் ஆண்டுவிழாவில் சிட்டிசன் 
 

ஒரு சிறப்பு பார்வை
 
ajith1

அஜீத் 9 வேடங்களில் நடிக்க உள்ளார் என்றதும் ரசிகர்களின் நாடித்துடிப்பு அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. எப்போது படம் வரும்...அஜீத்தின் கேரக்டர்கள் என்னென்ன என அடிக்கடி எழும் வினாக்களுக்கு விடை தேட ஆளாய் பறப்பர். ப்ளாஷ் நியூஸ் எந்தெந்த இதழ்களில் வருகின்றன என அப்டேட் செய்து கொண்டே இருப்பார்கள் அஜீத் ரசிகர்கள். 

நடிகர் அஜித்தின் சிட்டிசன் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

2001ல் சரவணன் சுப்பையா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அஜீத் குமார், வசுந்தரா தாஸ், மீனா, நக்மா, மணிவண்ணன், நிழல்கள் ரவி, பாண்டு ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்தது.

இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இந்நிலையில் சிட்டிசன் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

சிட்டிசன் படத்தின் சிறப்பம்சங்கள் 

அஜீத்தின் 9 கேரக்டர்களும் முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன.

படத்தின் கதைப்படி, ஒரு மாவட்ட நீதிபதி, கலெக்டர், காவல்துறை அதிகாரி ஆகியோர் பகலிலேயே கடத்தப்படுகின்றனர். இதற்கு காரணம் சிட்டிசன் (அஜீத்) என்பது தெரியவருகிறது. மத்திய புலனாய்வு அதிகாரி (நக்மா) விசாரிக்கையில் இவர்கள் அத்திப்பட்டி என்னும் மீனவ கிராம மக்களுடன் தொடர்புடையவர்கள். அங்கு 600 பேருக்கும் மேலானோர் அடையாளம் தெரியாதபடி அழிக்கப்பட்டிருந்தனர். இந்த ஊரே தற்போது மேப்பில் காணாமல் போயிருந்தது. இந்த ஊரில் முன்பு கூட்டுப்படுகொலை நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.

20 வருடங்களுக்கு முன் நடந்த இக்கொடூர சம்பவத்தில் அஜீத் எப்படி தப்பினார் என்பதும் இக்கிராமத்திற்கு அவர் தேடிய தீர்வு என்ன என்பதையும் வெள்ளித்திரை விளக்குகிறது. இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் படம் வெளியாவதற்கு முன்பே ஹிட்டாகி விட்டன. திப்பு பாடிய மேற்கே உதித்த சூரியனை கிழக்கே உதிக்க ஆணையிட்டோம் பாடல் மாஸ் ரகம். வசுந்தரதாஸின் காந்தக் குரலில் பூக்காரா...பாடலும், ஐ லைக்  யூ பாடலும் செம ஹிட். படத்தில் பாடல்களைப் பாடியதோடு மட்டுமல்லாமல் கதாநாயகியாகவும் நடித்திருப்பார் இவர்.

சுஜாதா எழுதிய கதையை எஸ்.எஸ்.சுப்பிரமணியம் தயாரித்து இருப்பார். 3; மணிநேரம் ஓடும் இப்படம் கொஞ்சம் கூட போரடிக்காமல் ரசிகர்களை அப்படியே இருக்கையில் கட்டிப்போட்டது. அஜீத்தின் நடிப்புக்கு மட்டுமல்லாமல் அவரது திரையுலக வாழ்வில் இப்படம் ஒரு மணிமகுடமாகவே அவருக்கு அமைந்தது. இந்தப்படத்தின் மேக்அப்பிற்காக அஜீத் மிகவும் மெனக்கெட்டிருப்பார்.

இது ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரித்தது. இந்தப்படத்தை ரசிகர்கள் அப்போது கொண்டாடி மகிழ்ந்தனர். படத்தின் இயக்குனர் சரவணன் சுப்பையாவும், எழுத்தாளர் பாலகுமாரனும் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் மெருகூட்டியது. தேவாவின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பிளஸ். தலைமுறைகள் கடந்த ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் இந்தப்படம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. 

From around the web

Trending Videos

Tamilnadu News