×

அங்கயும் ஒரு இரண்டாம் குத்து இருக்கு போல – ராம் கோபால் வர்மா படத்தின் சர்ச்சை போஸ்டர்!

ராம்கோபால் வர்மா முதன் முதலாக லெஸ்பியன் கிரைம் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கி வருகிறார். அந்த படத்தின் போஸ்டர்கள் கவர்ச்சியின் உச்சகட்டத்தில் அமைந்துள்ளன.

 

ராம்கோபால் வர்மா முதன் முதலாக லெஸ்பியன் கிரைம் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கி வருகிறார். அந்த படத்தின் போஸ்டர்கள் கவர்ச்சியின் உச்சகட்டத்தில் அமைந்துள்ளன.

இந்திய சினிமாவில் சர்ச்சைக்குப் பெயர் போனவர் ராம் கோபால் வர்மா. ஆரம்ப காலங்களில் வன்முறை சம்மந்தமான படங்களை இயக்கிய அவர் இப்போது கிட்டத்தட்ட பி கிரேட் மூவி இயக்குனர் போலாகிவிட்டார். அதை நிருபிக்கும் வகையில் அமைந்துள்ளன சமீபத்தில் இயக்கி வெளியான திரைப்படங்கள். இந்நிலையில் லாக்டவுனில் வரிசையாக படங்களை இயக்கி தனது ஓடிடி பிளாட்பார்மில் வெளியிட்டு வருகிறார். இவரது படங்கள் எல்லாம் 18+ ஆக இருப்பதால் அனைவரும் பணம் கட்டிப் பார்த்து வருகின்றனர். இதனால் அவரும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.

அந்த வரிசையில் இப்போது புதிதாக டேஞ்சரஸ் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் லெஸ்பியன்களைப் பற்றிய படம் என விளம்பரப்படுத்து வருகிறார். இதில் அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலி ஆகிய இரு நடிகைகளும் கதாநாயகிகளாக நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தின் கவர்ச்சிகரமான போஸ்டர்களை இப்போது அவர் வெளியிட்டுள்ளார். அது தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. நம்மூரில் சில நாட்களுக்கு முன்னர் இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கே இந்த போஸ்டர்கள் சலசலப்பை உருவாக்கியுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News