Connect with us

Bigg Boss

வாய்க்கொழுப்பால் புடுங்கப்பட்ட பீஸ்!.. கெட்டதுலயும் ஒரு நல்லது நடத்துருக்காம்.. இவரும் பிக் பாஸுக்கு போறாரா?..

சமீபத்தில் நடந்த சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவிடம் மேடையிலேயே ஹராஸ்மென்ட் செய்து சிக்கலில் சிக்கிய நடிகர் கூல் சுரேஷுக்கு எந்தவொரு சினிமா விழாக்களிலும், படங்களிலும் இனிமேல் அழைப்பே இல்லை என தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்டு பேசினால் 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்குமாம். ஆனால், கையை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் பெண் தொகுப்பாளினிக்கு மாலை போட்டு தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: முதல் பட ஹீரோவை மறக்காத நயன்தாரா!.. புதிய தொழில் தொடங்கியதும் யாரை அழைத்திருக்கிறார் பாருங்க!..

ஆனால், கெட்டதுலயும் ஒரு நல்லது நடக்கும்னு சொல்றது போல, சர்ச்சையில் சிக்கும் புள்ளிகளையே குறிவைத்து கமல்ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆள் சேர்த்து வரும் கூட்டம் தற்போது நீயும் வந்து வண்டியில ஏறுறியான்னு கேட்டு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இந்த சீனிலும் ஒரு அசல் கோலாறு கிடைத்து விடுமே என்றும் கூல் சுரேஷ் உள்ள போனால் கூலா இருக்க மாட்டாரே சூடாகிவிடுவாரே என ஏகப்பட்ட ட்ரோல்கள் இப்போதே பறக்க ஆரம்பித்துள்ளன.

இதையும் படிங்க: இவங்க விஷால் அண்ணியா?.. இல்லை வவ்வாலா தெரியலையே!.. இப்படி தலைகீழ தொங்கி தாறுமாறு பண்றாங்களே!..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் கலந்துக் கொண்டால் காமெடிக்கும், சர்ச்சைக்கும் பஞ்சம் இருக்காது என்றும் அவருக்கும் ஒரு பொழைப்பு கிடைத்தது போல இருக்கும் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நாளை மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 7 தொடங்கவுள்ள நிலையில், கூல் சுரேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்கிறாரா? அல்லது அங்கேயும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு துரத்தி அடிக்கப்பட போகிறாரா? என்பதை காத்திருந்து காண்போம்!..

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top