Categories: Cinema News latest news

தலைவன் வேற ரகம்! படக்குழுவே இப்படி யோசிக்கல.. ‘கோட்’னா என்னனு காட்டிய கூல் சுரேஷ்

Cool Suresh: எந்த ஒரு புதிய படம் ரிலீஸ் ஆனாலும் தவறாமல் வந்து படத்தைப் பற்றியும் படத்தில் நடித்த நடிகர்களை பற்றியும் மிகத் தெளிவாக விமர்சனம் செய்வதில் கூல் சுரேஷ் எப்போதுமே வித்தியாசம் தான். அதுவும் படத்தை பார்க்கும்போது படத்திற்கு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு ப்ராப்பர்ட்டியுடன் வந்து படத்தை புரொமோட் செய்வார்.

அந்த வகையில் இன்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்படமான கோட் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அந்த படத்தை பார்க்க வந்த கூல் சுரேஷ் வரும்போது ஒரு ஆட்டுடன் வந்தார்.இதை பார்த்த ரசிகர்கள் அதுவும் குறிப்பாக விஜய் ரசிகர்கள் கடுப்பாகி போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: விஜய்ங்கிற ஆட பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி பிரியாணி போட்ருக்கார் விபி!.. கோட் எப்படி இருக்கு

ஆனால் படத்தை இப்படியும் ப்ரொமோட் செய்யலாம் என சொல்லாமல் சொல்லி இருக்கிறார் கூல் சுரேஷ். பேருந்து நிலையம் முழுவதுமாக அந்த ஆட்டுடன் உலா வந்து அதன் பிறகு தியேட்டருக்குள் வந்து படம் பார்த்திருக்கிறார் கூல் சுரேஷ். படத்தை பார்ப்பதற்கு முன்பே தளபதி தளபதி என கத்திக் கொண்டே தான் உள்ளே செல்கிறார்.

cool

அவரை சூழ்ந்து ஏராளமான ரசிகர்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும் அவரை கட்டி அனைத்தும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். இதனிடையில் 2026க்குள் சிஎஸ்கே என்ற ஒரு பெயரில் தனி கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும் விஜய்யுடன் சேர்ந்து கூட்டணி வைக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் கூல் சுரேஷ்.

இதையும் படிங்க: நெகட்டிவ் ஷேடில் விஜய்? கொடுக்கிற காசுக்கு கோட் படம் வொர்த்தா? ரசிகர்கள் கருத்து

அந்த வகையில் இன்று விஜய் நடித்த கோட் திரைப்படத்தை வந்து பார்த்திருக்கிறார். படம் தமிழகத்தில் காலை 9 மணி காட்சியில் ரிலீஸ் ஆகி இருக்கின்றது. படத்தை பார்க்க ஏராளமான பிரபலங்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். கோவையில் சிவகார்த்திகேயன் ஒரு தியேட்டரில் முதல் ஆளாக படத்தை பார்த்திருக்கிறார்.

அதேபோல் த்ரிஷாவும் படத்தை பார்க்க வருகை தந்தார். இன்னொரு பக்கம் கீர்த்தி சுரேஷ் முதல் காட்சியை பார்க்க திரையரங்கிற்கு வந்திருக்கிறார். இப்படி அடுத்தடுத்து பிரபலங்கள் வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: மோகன்லால் சான்ஸ் கொடுக்கலன்னு போட்டுக் கொடுத்துருப்பாங்க… என்ன சொல்றாங்க ஷர்மிளா?

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini