×

கொரோனாவும் கடவுளும் – டிவிட்டரில் மோதிக்கொள்ளும் நட்டியும் இயக்குனர் ராம்குமாரும் !

கொரோனா வைரஸ் குறித்து டிவிட்டரில் முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமாரும் ஒளிப்பதிவாளர் ராம்குமாரும் இரு வேறுபட்ட கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

 

கொரோனா வைரஸ் பீதி இந்தியாவில் அதிகமானதை அடுத்து தமிழகத்தில் பகுத்தறிவாளர்களுக்கும் கடவுள் நம்பிக்கையாளர்களுக்கும் இடையே ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. கடவுளைத் திட்டியதால்தான் கொரோனா வந்துள்ளதாக நம்பிக்கையாளர்களும், கோயில்களுக்கு பக்தர்களை வரவேண்டாம் என அறிவித்தபோது இதுதான் உங்கள் கடவுளின் பலமா என பகுத்தறிவாதிகளும் கேள்வி எழுப்பினர்.

இதன் ஒருகட்டமாக தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான நட்ராஜ் ‘கடவுள நூறு வருஷமா திட்டினோம்... இன்னைக்கு கடவுள் கதவை மூடிட்டாரு.... என்ன பண்ணுவோம் மனிதர்களே...எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குனர் ராம்குமார் ‘அன்பும் அறிவியலும் மட்டும்தான் வெற்றி பெறும்! 100 வருடங்களுக்கு முன்னாடியே வந்த பல கொள்ளை நோய்கள் அனைத்துக்கும் அறிவியல்தான் மருந்து கொடுத்துருக்கு. கடவுள் அல்ல!எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News