×

கொரோனா எதிரொலி ; 19ம் தேதி முதல் படப்பிடிப்புகள் ரத்து : பெப்சி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழ் திரையுலகின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்திய உட்பட பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. சீனா, இத்தாலி, ஐரோப்பியா நாடுகளில் இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 112 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், துபாயிலிருந்து சென்னை வந்த 14 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் அச்சத்தில் பல மாநிலங்களில் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அஜித், சிம்பு, ரஜினி உட்பட பல முன்னணி ஹீரோக்களின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு வருகிற 19ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக தமிழ் திரைப்பட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் (பெப்சி)  ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News