×

சென்னை கடற்கரையில் தூங்கிய தம்பதிகள்… காலையில் எழுந்த போது அதிர்ச்சி !

சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் படுத்துறங்கிய தம்பதிகள் தங்கள் 8 மாதக் குழந்தையை பறிகொடுத்துள்ளனர்.

 

சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் படுத்துறங்கிய தம்பதிகள் தங்கள் 8 மாதக் குழந்தையை பறிகொடுத்துள்ளனர்.

க்கிரவாண்டியை சேர்ந்த சினேகா(23) என்பவரும் கும்பகோணத்தைச் சேர்ந்த பாட்ஷா(25) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு தற்போது 8 மாதக் குழந்தை ஒன்று உள்ளது. இதையடுத்து இவர்கள் பிழைப்புக்காக சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் ஊசிமணி பாசிமணி விற்று வருகின்றனர். இரவு நேரங்களிலும் அங்கேயே படுத்து தூங்குவது இவர்களது வாடிக்கை.

இந்நிலையில் வழக்கம் போல அவர்கள் நேற்றிரவு கடற்கரையில் படுத்துத் தூங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்த்த போது குழந்தையைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது ஒரு பெண் குழந்தையை தூக்கிச் சென்றுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் பற்றிய தகவலை சென்னையில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணையை முடுக்கி விட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News