×

அப்பப்பா...இவங்கள தியேட்டருக்கு வரவழைக்க 
என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு...!

 
mayabazaar

ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ்;, கார்த்திக் போன்ற முன்னணி நாயகர்கள் கோலூச்சிய காலகட்டத்தில் மற்ற சிறு குறு படத் தயாரிப்பாளர்கள் தமது படத்திற்கும் ரசிகர்களை எப்படியாவது வரவழைக்கவேண்டுமே என்ன செய்வது என்று யோசித்தனர். அப்போது அவர்கள் வித்தியாசமாக எதையாவது ரசிகர்ளுக்குக் காட்ட வேண்டும். அப்போது தான் அவர்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என்பதை திடமாக நம்பினர். அப்போது தான் ஏராளமான மாயாஜால படங்களும், திகில் படங்களும், பாடல்களே இல்லாத படங்களும், துப்பறியும் படங்களும் திரைக்கு வந்தன.

அந்த வரிசையில் ஜெகன் மோகினி, மைடியர் லீசா, 13ம் நம்பர் வீடு, வா அருகில் வா போன்ற திகில் படங்கள் ரசிகர்களை பிரமிப்புடன் பார்க்க வைத்தன.

அக்காலத்தில் பாதாள பைரவி, மாயாபஜார், பட்டணத்தில் பூதம் போன்ற படங்களுக்கு மிகவும் வரவேற்பு இருந்தது. இதுபோன்ற படங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் ரசிகர்களை திரையரங்கிற்குள் அழைத்து வந்தன. கம்ப்யூட்டர் மூலம் இசையை பதிவு செய்த முதல் தமிழ்படம் கமல் நடிப்பில் வெளியான விக்ரம். இது 1986ல் வெளியானது.

முதல் டிடிஎஸ் படமாக கருப்பு ரோஜா படம் வெளியானது. இயக்குனர் ஆபாவணனும், இயக்குனர் ஜே.பன்னீரும் இணைந்து தயாரித்த படம் இது. இதில் பாதி படம் மட்டுமே டிடிஎஸ் தொழில்நுட்பத்தில் உருவானது.

 

முதல் டால்பி ஸ்டீரியோ சரவுண்ட் சிஸ்;டத்தில் குருதிப்புனல் படம் வெளியானது. அதன்பிறகு சவுண்ட் சிஸ்டத்தில் விதவிதமான தொழில்நுட்பங்கள் வந்தன. இயற்கையிலிருந்து வரும் ஒலியை அப்படியே உள்வாங்கி பதிவு செய்த படம் விருமாண்டி. 
இந்தியாவிலேயே ரஜினிகாநத் நடித்த சிவாஜி திரைப்படம் முதல் டால்பி அட்மாஸ் ஒலிப்பதிவு படம்; என்ற பெருமையுடன் வெளியானது. பின்னர் ஸ்டீரியோ 7 டிராக் சிஸ்டங்கள் என வரத்தொடங்கிவிட்டன. பிலிமில் இருந்த சினிமா டிஜிட்டலுக்கு தாவி விட்டது. 
சூப்பர் 35 எம்எம் தொழில்நுட்பத்தில் வந்த முதல் படம் தனுஷ் நடித்த புதுப்பேட்டை.  திரைக்கதைக்கு சாப்ட்வேர் பயன்படுத்திய முதல் படம் தேவர்மகன். டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மெருகூட்டிய படம் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ். நியூ ஏரோ 3டி தொழில்நுட்பத்தில் திரையரங்கிற்கு ஒரு மிரட்டலான ஒலியமைப்புடன் வெளியான படம் கமலின் விஸ்வரூபம். படத்தில் போர்க்காட்சி வந்தால் நாமும் அந்த போர்க்களத்தில் பயணிப்பது போன்ற உணர்வைத் தரும் இந்தத் திரைப்படம்.

நேரோ மோஷன்; கண்ட்ரோல் கேமராவை வைத்து 360 டிகிரி ஆங்கிளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வெளியானன படம் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி. மேலும் 7-டி புரொஜெக்ஷன் வந்து விட்டது. பெர்பாமன்ஸ் கேப்சர் டெக்னாலஜியைப் பயன்படுத்தி வெளியான முதல் தமிழ்படம் சூர்யா நடிப்பில் வெளியான மாற்றான். இந்திய அளவில் மோஷன் கன்ட்ரோல் டெக்னாலஜியில் வெளியான முதல் தமிழ் படம் 2001ல் கமல் நடித்த ஆளவந்தான். தமிழ்சினிமாவில் போஸ்டரை மோஷன் போஸ்டராக வடிவமைத்த முதல் தமிழ் படம் விஜய் நடித்த கத்தி. இது 2004ம் ஆண்டு வெளியானது. படம் கமலின் இன்னும் திரைக்கு வராத சபாஷ் நாயுடு படம். கத்தி, சாமி 2, தர்பார், பேட்ட, விஸ்வாசம் போன்ற படங்களுக்கும் இதே தொழில்நுட்பத்தில் போஸ்டர் வந்தது குறிப்பிடத்தக்கது. 

வரும் காலத்தில் சினிமாவில் கதாநாயகி மல்லிகைப்பூவுடன் வந்தால் அதன் வாசனையை நாம் நுகரலாமாம். இப்போது இன்னும் ஒரு படி மேல் போய் படத்தில் மழை பெய்தால் நமக்கும் சாரல் வீசுமாம். அதுபோன்ற திரையரங்கங்கள் ஒரு சில தான் உள்ளது என்கிறார்கள். 

மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை தமிழ்சினிமாவில் முதல் 3 டி படமாக கொண்டு வந்தனர். கண்ணாடி அணிந்து பார்க்கும் போது ஒருவித பரவசத்தை உண்டுபண்ணிய படம் அது. ஈட்டியை நீட்டினால் அது நம் கண்ணை குத்த வருவது போல் இருக்கும். ஐஸ்கிரீமை ஒரு சிறுவன் நீட்டும்போது அது நம் வாயருகே வருவது போல இருக்கும். நாமும் நாக்கை சுழட்டுவோம். அதன்பிறகு ஆங்கிலப்படங்களில் சிறந்த படங்களைத் தமிழில் டப்பிங் செய்ய ஆரம்பித்தனர். ஜங்கிள் புக், ஜூராசிக் பார்க், ஜூமாஞ்சி, அனகோண்டா, டைட்டானிக் போன்ற பிரம்மாண்டமான படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கு படையெடுத்தன. அதேபோல் ஜாக்கிஷான், புருஸ்லீ, அர்னால்டு, ஜெட்லீ படங்களும் திரைக்கு வந்தன. அவர்களின் பிரத்யேக சண்டைக்காட்சிகளைக் காணவே நிறைய ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவர்.

From around the web

Trending Videos

Tamilnadu News