சித்ராவுடன் என்ன உறவு ? - முதன் முறையாக மனம் திறந்த டிவி நடிகர்...

சமீபத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவரின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், சின்னத்திரை நடிகரும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்தவருமான தக்ஷனுக்கும், சித்ராவுக்கும் சில வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்ததாகவும், இருவரும் டேட்டிங் சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி அவர் சித்ராவை மிரட்டி வந்ததாகவும், அந்த வீடியோவை ஹேமந்திடம் காட்டி விடுவேன் என அவர் சித்ராவை மிரட்டியதாகவும் செய்திகள் வெளியானது. சித்ராவின் தோழியும், சின்னத்திரை நடிகையுமான ஒருவர் இந்த தகவலை பகிர்ந்திருந்தார்.ஆனால், இது தொடர்பாக தக்ஷன் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள தக்ஷன் ‘என்னையும், சித்ராவையும் இணைத்து வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது. சித்ரா எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. அவரின் இறுதி சடங்கில் கூட நான் கலந்து கொண்டேன்’ என அவர் விளக்கமளித்துள்ளார்.