‘விடுதலை 2’க்கு இத்தனை படங்கள் போட்டியா? ஒரே நாளில் வெளியாகும் அந்தப் படங்களின் லிஸ்ட் இதோ

by Rohini |   ( Updated:2024-12-19 08:00:11  )
viduthalai2
X

viduthalai2

விடுதலை 2:

நாளை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் விடுதலை 2. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகும் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த படத்தின் முதல் பாகம் பேசிய அரசியல் இரண்டாம் பாகத்தில் எந்த மாதிரி பேசப்போகிறது என்பதை பார்க்கவே அனைவரும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். முதல் பாகத்தில் வாத்தியார் என்ற கேமியோ ரோலில் விஜய் சேதுபதி நடித்திருப்பார்.

ஆனால் இரண்டாம் பாகத்தில் எப்படி வாத்தியாராக மாறினார் என்பதை பற்றிய கதையாக தான் படம் முழுவதும் இருக்கப் போகிறது. அதனால் விஜய் சேதுபதி இந்த இரண்டாம் பாகத்தில் படம் முழுக்க வரப்போகிறார். அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை எப்படியானது என்பதை பற்றி விளக்கும் திரைப்படமாகத்தான் இந்த விடுதலை படம் அமைந்திருக்கிறது. முதல் பாகம் ஆரம்பிக்கும் போதே ரயில் விபத்திலிருந்து ஆரம்பித்தார்கள்.

இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு:

அதனால் இந்த இரண்டாம் பாகத்தில் அந்த ரயில் விபத்திற்கான காரணம் ஏதேனும் இருக்குமா என்பதும் நாம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் .ஏனெனில் இந்த ரயில் விபத்துக்கு காரணம் ஒரு அமைப்பு என்று தான் காவல்துறையினர் கருதுகின்றனர். ஒருவேளை விஜய் சேதுபதியின் அமைப்பு தான் இந்த ரயில் விபத்துக்கு காரணமா என்ற கோணத்திலும் இந்த இரண்டாம் பாகம் இருக்கப் போகிறது .முதல் பாகத்தில் பல்வேறு கேள்விகள் நம் மனதில் எழுந்து கொண்டே இருந்தன.

அதற்கு எல்லாம் விடையாக இந்த இரண்டாம் பாகம் அமையுமா? என்பதையும் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் நாளை மேலும் மூன்று படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. அந்த மூன்று படங்களின் ப்ரோமோஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் முதலாவதாக தி லயன் கிங் என்ற படத்தின் இரண்டாம் பாகம் முஃபாஸா என்ற பெயரில் நாளை ஒரு திரைப்படம் வெளியாகிறது.

தமிழ் நடிகர்களின் ஆதிக்கம்:

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்த படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் டப்பிங் பணிகளின் போது எடுக்கப்பட்ட வீடியோவை டிஸ்னி வெளியிட்டது. இந்த படத்திற்கான தமிழ் டப்பிங் நம் தமிழ் நடிகர்கள் அதுவும் பிரபலமான நடிகர்கள் பேசி இருப்பது தமிழ் ரசிகர்களிடையே இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்ததாக கன்னட நடிகர் உபேந்திரா நடிக்கும் UI திரைப்படமும் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இதுவும் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது .அடுத்ததாக மலையாளத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் நாளை ரிலீஸ் ஆகும் திரைப்படம் மார்கோ. இதுவும் தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது. இது ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அதனால் நாளை வெளியாகும் நான்கு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

இதையும் படிங்க: கம்பீரமான மனுஷன் சிதஞ்சு இருந்தாரு!.. AI மூலமா காட்டாதீங்க.. கண்கலங்கிய விக்ரமன்..

Next Story