Categories: Cinema News latest news

கட்டம் சொல்லுது.. அஜித் சி.எம். ஆவது உறுதி!.. கொளுத்திப்போட்ட பிரபல இயக்குனர்..

Actor Ajith: எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் தானாக முளைத்த விதை என்றே சொல்லலாம் நடிகர் அஜித்தை. ஆரம்பகாலங்களில் அவர் பட்ட கஷ்டம் எக்கச்சக்கம். எல்லாவற்றையும் பொறுமையாக கையாண்டு இன்று தென்னிந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த நடிகராக மாறியிருக்கிறார் அஜித்.

ஏகப்பட்ட காயங்கள், விபத்துக்கள் என தனது பொழுதுபோக்காக பார்க்கப்படும் ரேஸ் மூலமாக எக்கச்சக்க அடிகளை வாங்கியவர் அஜித். இருந்தாலும் சினிமாவிற்காக அந்த வலிகளை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வந்தவர்.

இதையும் படிங்க: அஜித் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை இதுதானா? சூர்யாவுக்கு வச்ச ஆப்பு

இன்று தமிழ் சினிமாவிலேயே கோடிக்கணக்கான ரசிகர்களை அதிகமாக வைத்திருக்கும் நடிகர்களில் அஜித் முதலிடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் அஜித்தை வைத்து ஆரம்பகாலங்களில் தொடர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராஜ்கபூர் அஜித்தை பற்றி சில விஷயங்களை பகிர்ந்தார்.

அதாவது அஜித் அப்போ எப்படி இருந்தாரோ அதே மாதிரிதான் இப்பவும் இருக்கிறார். நிஜத்தில் நடிக்க தெரியாத நடிகர் அஜித். அவர் ஒரு சுயம்பு. தானா விழுந்து எழுந்து வந்தவர். அவர் மட்டும் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக முதலமைச்சர் நாற்காலியில் உட்காருவார்.

இதையும் படிங்க: பண உதவி கேட்டுப்போன விகே ராமசாமி!.. என்.எஸ்.கே கொடுத்தது என்ன தெரியுமா?!..

அப்படிப்பட்ட ஜாதகத்தை வைத்திருப்பவர் அஜித். ஆனால் அதற்கான விதையை இன்னும் போடவில்லை. மௌனமாக இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை வந்தால் கண்டிப்பாக அந்த நாற்காலி அவருக்குத்தான்.

ஆனால் வராமல் போகமாட்டார். பொறுத்திருந்து பாருங்கள். நான் அடிச்சு சொல்கிறேன் என ஆணித்தரமாக அஜித்தை பற்றி இந்தளவுக்கு பேசினார் ராஜ்கபூர். ஆனால் ஒரு சதவீதம் கூட ராஜ்கபூர் சொன்னதை போல அஜித்திடம் அப்படி ஒன்றும் தெரியவில்லை.

இதையும் படிங்க: ஏதோ நடந்திருக்கு! ஹீத்தலை கூப்பிட்டா வருவா? ஷகீலா கேட்ட கேள்வியால் திக்குமுக்காடிய பப்லு

அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருக்கிறார். இவர் எப்படி அரசியலுக்குள் வருவார் என்றுதான் ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Published by
Rohini