Categories: Cinema News latest news

இனிமே நோ ரெஸ்ட்!.. கொலைவெறியில் கோடி கோடியா அள்ள கணக்கும் போடும் தனுஷ்…

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மிகவும் ஆக்ரோஷமாகவும், வித்யாசமாகவும் இருந்த அந்த டீசர் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  இந்த படம் வருகிற டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக நடிகர் தனுஷ் தனது 50ஆவது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினே இல்லை என்றும், அனிகா சுரேந்திரன் இவரது தங்கையாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானது.

இந்த படமும் மிக வித்யாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்காக அவர் மொட்டை அடித்துள்ளார். இதனால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதற்கடுத்து ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். ஏற்கனவே இந்தியில் மூன்று படங்களில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார்.

இதையும் படிங்க- ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் குடும்பம் இதுதானாம்!.. தமன்னாவ காட்டி ஏமாத்திப்புட்டாய்ங்க!…

இந்த படம் முடித்த உடனேயே அடுத்து மீண்டும் தமிழில் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கப்போகிறார். அடுத்தடுத்து ஓய்வே இல்லாமல் படங்களில் நடிப்பது, இயக்குவது என படு பிசியாக ப்ளான் செய்து வைத்துள்ளார். எல்லா ஹீரோக்களையும் விட மிக பிசியாக இருப்பது தனுஷ் தான்.

அதுவும் எல்லா படங்கள் மீதும் மிகுந்த எதிர்ப்பார்ப்பும் உள்ளது. சமீபத்தில் தான் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் வீடு வாங்கினார். இந்நிலையில் இவர் அடுத்தடுத்து படங்களில் நடிப்பது குறித்து செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். தனுஷ் மிகவும் தெளிவாக இருக்கிறார். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பார்கள். நல்ல பட வாய்ப்புகள் வரும் போதே ஓய்வெடுக்காமல் நடித்து, சம்பாதித்துவிட வேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறார். என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- மீண்டும் படமெடுக்கும் ‘இதயம்’ கதிர்.. ஹீரோயின் அந்த பச்ச மண்ணா?!..

Published by
prabhanjani