Connect with us

Cinema News

தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் குழாயடி சண்டையில் விஜய்.?! இதென்ன புதுசா இருக்கு.!?

தமிழ் திரையுலகில் பல பிரபலங்கள் நடுவே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு உள்ளன. அதன் காரணமாக அந்த பிரபலங்கள் மீண்டும் இணைந்து நடிப்பது இல்லை. இப்படி, பலர் தமிழ் சினிமாவில் பலர் இருக்கின்றார்.

அப்படி தான் சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இடையே ஏற்பட்ட புகைச்சல் கோலிவுட் முழுவதும் காட்டு தீயாய் பரவியது. அதாவது, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வடசென்னை படத்தில் முதலில் இசையமைக்க கமிட் ஆனது ஜிவி தானாம்.

அதன் பிறகு தனுஷ் – ஜிவி இடையே ஏற்பட்ட புகைச்சல் தான் வடசென்னை படத்திற்குள் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளே வந்தார் என்ற தகவலும் உண்டு. இந்த பிரச்சனை எப்போது ஆரம்பித்தது என்றால்,

ஒரு பிரபல பத்திரிகை தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் யார் என ரசிகர்கள் மத்தியில் எடுத்த சர்வேயில் வென்றது விஜய். உடனே அந்த பத்திரிகை, விஜயிடம் பேட்டி கேட்டுள்ளது. அதற்கு பாலமாக ஜிவி.பிரகாஷ் இருந்துள்ளார். இந்த பேட்டி காலதாமதம் ஆனதால்,

இதையும் படியுங்களேன் – ஒரு வாரமா கோமாவுல இருந்தீங்களா.?! அஜித்துக்கு வாழ்த்து கூறி வம்பில் மாட்டிக்கொண்ட ‘அந்த’ நடிகை.!

திடீரென இந்த பத்திரிகையில் தனுஷ் தான் ஜெயித்துவிட்டார் என்ற தகவலும், தனுஷ் பேட்டியும் வந்துவிட்டதாம். இதனை பார்த்த ஜிவி.பிரகாஷ் கோபத்தை பொறுத்து கொள்ள முடியாமல், அந்த பத்திரிகை அதிகாரியுடன் பேசிய சாட்டிங் ரெக்கார்டை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை உண்டு பண்ணிவிட்டாராம் ஜிவி. அதன் காரணமாக தான் ஜிவி பிரகாஷ் மற்றும் தனுஷ் இடையே பிரச்சனை எழுந்ததாம்.

இதனை பிரபல சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி ஒரு வீடியோவில் தெரிவித்தார். ஆனால் அந்த பகையெல்லாம்  தற்போது சுத்தமாக இல்லை என்றே கூறவேண்டும். தனுஷ் நடித்த அசுரன், மாறன் ஆகிய படங்களுக்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top