">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஏன்பா இன்னுமா திரைக்கதை எழுதுற… தனுஷை கடுப்பேத்திய இயக்குனர்!
ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த திரைப்படம் தொடங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த திரைப்படம் தொடங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் சிறந்த திரைக்கதை கொண்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராம்குமாரின் திறமையைப் பார்த்து தனுஷே அழைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்புக் கொடுத்தார். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த படம் பற்றிய அறிவிப்பு ஓராண்டுக்கு முன்னரே வெளியானது.
ஆனால் இயக்குனர் ராம்குமாரோ இன்னமும் அந்த படத்துக்கான திரைக்கதையை அமைக்கவில்லையாம். அதனால் தனுஷ் ஒவ்வொரு முறையும் கேட்டு கேட்டு பார்த்து இப்போது அவருக்காக ஒதுக்கிய தேதிகளை கார்த்திக் நரேன் படத்துக்கு ஒதுக்கியுள்ளாராம்.