
Cinema News
கன்பார்ம் ஆச்சுங்கோ… தனுஷின் கைவசம் வந்த மல்லுவுட் வெற்றி இயக்குனர்.. அப்டேட் என்ன தெரியுமா?
Published on
By
Dhanush: எத்தனை சர்ச்சைகள் உலா வந்தாலும் தான் செய்வதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பவர்தான் நடிகர் தனுஷ். அந்த வகையில் அவரின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பால் கவரப்பட்டு பெரிய அளவில் புகழை தேடிக் கொண்டவர் நடிகர் தனுஷ். கோலிவுட்டில் இருந்து பாலிவுட், பின்னர் ஹாலிவுட் என பல மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் டைரக்ஷன், பாடலாசிரியர் என பல விதங்களில் பெர்ஃபார்மன்ஸ் செய்து வருகிறார்.
இதையும் படிங்க: இளையராஜாவின் மாங்குயிலே.. மாங்குயிலே! அவர பத்தி தெரியாம இவங்க வேற கும்மாளம் போடுறாங்களே
தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடிக்கிறார் தனுஷ். இப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் பிச்சைக்காரர் வேடம் என்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் கூட குப்பை கிடங்கில் பல மணி நேரம் எதையும் யோசிக்காமல் நின்று தனுஷ் நடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, பா பாண்டி திரைப்படத்திற்கு பின்னர் அவர் இயக்கத்தில் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் உருவாகி வருகிறது. தானே நடித்து இயக்கும் ராயன் திரைப்படத்தின் கதை பெரிய அளவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் தனுஷ் உடன் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இன்னொரு படமாக, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை முழுக்க முழுக்க இளைஞர்களை வைத்து இயக்கி வருகிறார் தனுஷ்.
இதையும் படிங்க: விஜய்க்கு மிகவும் பிடித்த திரைப்படம்! பாத்துட்டு மனுஷன் இப்படிலாம் பண்ணுவாரா?
இந்நிலையில் அவர் அடுத்த திரைப்படம் தமிழ் ஹீரோவுடன் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில், சிதம்பரம் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தினை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது. எனினும், குபேரா, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், ராயன் படங்களை தனுஷ் முடித்துவிட்டு, இளையராஜா பயோபிக் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி படங்களை முடித்த பின்னரே சிதம்பரத்துடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த...
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...
Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான...
Vijay: கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது....