Connect with us

Cinema News

அப்பா பெயரை காப்பாத்தணும்!.. ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு போற போக்குல ஆப்பு வைத்த தனுஷ்?..

கேப்டன் மில்லர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கி நள்ளிரவு வரை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட நடிகர் தனுஷ் ஆரம்பத்திலேயே நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்திய பின்னர் நிகழ்ச்சியை தொடங்கினார்.

ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் ஜனவரி 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

இதையும் படிங்க: கேப்டனை மறக்காத கேப்டன் மில்லர்!.. ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!..

அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில், மேடை ஏறி பேசிய தனுஷ் அப்பா பெயரை காப்பாற்றுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது என்றும் அதை எப்படி செய்யணும் என உங்களை பார்த்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் என கன்னட சூப்பர்ஸ்டார் மறைந்த ராஜ்குமாரின் மகனான சிவராஜ்குமாரை பார்த்து சொன்ன தனுஷ் என்னோட பசங்களும் இங்கே இருக்கானுங்க, நிச்சயம் உங்களை பார்த்து கத்துப்பாங்க என பேசியுள்ளார்.

பிரிந்து போன மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்குத்தான் மறைமுகமாக தனுஷ் இப்படி அட்வைஸ் செய்கிறார் என்றும் கோச்சடையான் படத்தை எடுத்து அப்பா ரஜினிகாந்தை செளந்தர்யா ரஜினிகாந்த் நோகடித்தார். தற்போது லால் சலாம் படத்தை எடுத்து சொன்ன தேதியில் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடியாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் அப்செட் ஆக்கி உள்ளார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு!.. 2ம் திருமணம் முடிந்த கையோடு அம்மாவான அமலா பால்!..

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top